அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கட்டாயம்.. யுஜிசி திடீர் உத்தரவின் பின்னணி..

By Thanalakshmi VFirst Published Sep 19, 2022, 12:23 PM IST
Highlights

அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.
 

நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள விடுதிகள் , வளாகங்கள் உட்பட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.கல்லூரிகளில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டாலும் ராகிங் கொடுமைகள் இன்னும் நடைபெற்று வருவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில் யுஜிசி அனைத்து கல்லூரிகளிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று உத்தரவு வெளியிட்டுள்ளது.

மேலும் விடுதிகள், உணவகங்கள், கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணி பொருத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க:Chandigarh University: ஆபாச வீடியோ விவகாரம்: சண்டிகர் பல்கலைக்கழகம் மூடல்: காப்பாளர் சஸ்பெண்ட்,3 பேர் கைது

2009ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவுப்படி ராகிங் சட்டப்படி குற்றமாகும். பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956-ன் படி, உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை அனைத்து கல்வி நிறுவனங்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ராகிங் செய்ய மாட்டேன் என்று மாணவர்களும் பெற்றோரும் https://antiragging.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடயே பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் 60 மாணவிகளின் குளியல்  வீடியோக்களை, சக மாணவி தனது ஆண் நண்பருக்கு அனுப்பி சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஏராளமான மாணவிகள் நடந்த போராட்டத்தையடுத்து, பல்கலைக்கழகத்தை வரும் 24ம் தேதிவரை மூட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க:60 மாணவிகளின் குளியல் வீடியோஸ்.. லீக் செய்த சக மாணவி கைது - ஆபாச தளத்திற்கு விற்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

click me!