புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலைநிறுத்தம்..!

By vinoth kumarFirst Published Sep 19, 2022, 2:49 PM IST
Highlights

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் பதவி உயர்வு வழங்க கோரி காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் பதவி உயர்வு வழங்க கோரி காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அகில இந்திய தொழில் நுட்ப பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஐந்து கட்ட பதவி உயர்வுக்கான தகுதிகளை வரையறுத்து ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் பணி உயர்வுக்கான நேர்காணல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நேர்காணல் நடத்தி பேராசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டது. அதன் பிறகு இதுவரை பணி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இதனை கண்டித்தும், தகுதி வாய்ந்த 50 பேராசிரியர்களுக்கு நேர்காணல் நடத்தி  பணி உயர்வு வழங்க வேண்டும் என கோரி பேராசிரியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

பல்கலைக்கழக நிர்வாகம் அதன் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தை புதுச்சேரி  தொழில் நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் தொடங்கி உள்ளனர். அப்போது அவர்கள் கல்லூரி வாயில் முன்பு ஒன்று திரண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பேராசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

click me!