மணிப்பூரில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு? அரசு என்ன செய்யப் போகிறது?

By Ramya sFirst Published May 20, 2023, 12:11 PM IST
Highlights

மணிப்பூரில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மற்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் போக்குவரத்து எரிபொருளைப் போலவே, உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையால் எழும் இந்த முக்கியமான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மணிப்பூர் மற்றும் மருந்து வணிகர்கள் சங்கம் (எம்சிடிஏ) மாநில அரசை வலியுறுத்தியது. ஆனால் இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

மணிப்பூர் மருந்து வணிகர் சங்கத்தலைவர் ஆர்.கே. ராகேஷ் இதுகுறித்து பேசிய போது “ அத்தியாவசிய மருந்துகளை ஏற்றிச் செல்லும் சுமார் 12 டிரக்குகள் மாவோ மற்றும் சேனாபதிக்கு இடையே சிக்கியுள்ளன, மேலும் 14 டிரக்குகள் கவுகாத்தியில் சிக்கியுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பீதியுடன் வாங்கிச் செல்வதாலும், ஒரு சில வியாபாரிகள் பதுக்கி வைப்பதாலும் நிலைமை மோசமாகியுள்ளது என்றார்.

இதையும் படிங்க : சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் யார் யார்? வெளியான உத்தேச பட்டியல்..

சில மருந்து நிறுவனங்கள் மருந்துகளை விமானத்தில் ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளன, ஆனால் சரக்குகளின் அளவு குறைவாக இருப்பதால், தேவையை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. இந்த மருந்து நெருக்கடி அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால், உயிர்காக்கும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை மாநிலத்தில் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு ஆபத்தான பிரச்சினைகளை உருவாக்கும் என்று ராகேஷ் கூறினார்.

இதையும் படிங்க : தமிழ்நாடு 2023: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! 

சில பழங்குடியின மக்கள் மற்றும் அமைப்புகள், மாநில அரசுக்கு ஒத்துழைக்காததன் ஒரு பகுதியாக, அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து, சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்வதற்கு கடுமையான சிரமங்களை ஏற்படுத்துகின்றன. வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, மணிப்பூர் செல்லும் சரக்கு லாரிகளுக்கு பாதுகாப்பை வழங்க ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் முயற்சித்து வருகின்றன.

பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மே 15 முதல், உணவு தானியங்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சுமார் 130 வாகனங்கள் பல்வேறு நெடுஞ்சாலைகள் வழியாக மணிப்பூருக்குள் நுழைந்துள்ளன. மேலும், வாகனங்களின் இயக்கமும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மே 3 முதல் மணிப்பூரில் இனக்கலவரத்தில் 73 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 250 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!