மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் புதிய வீட்டின் இடத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் புதிய இல்லம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கட்டுமானப் பணியின் போது ஒரு தொழிலாளி இறந்தார். இதுகுறித்து கேர்வாடி போலீசார், ஒப்பந்ததாரர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷிவ்ராம் துபே என்ற 35 வயது நபர், கடந்த சில நாட்களாக மாடோஸ்ரீ கட்டுமான தளத்தில் பணிபுரிந்து வந்தார். இதுகுறித்து போலீஸ் அவட்டாரங்கள் தெரிவித்ததாவது, “இந்த சம்பவம் புதன்கிழமை நடந்தது. தொழிலாளி தற்செயலாக உயரத்தில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்தார். அவர் சியோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிங்க..இனி உங்க காதலியின் Chat பாதுகாப்பா இருக்கும்.. யாராலும் படிக்க முடியாது.! WhatsApp அசத்தல் அப்டேட்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இறந்ததாக அறிவிக்கப்பட்டார்” என்று கூறினர். டிசிபி தீக்ஷித் கெடம் கூறுகையில், “மாதோஸ்ரீ கட்டுமான தளத்தில் ஒப்பந்ததாரர் மீது, மரணத்தில் அலட்சியத்தால் வழக்கு பதிவு செய்துள்ளோம். வழக்கு விசாரணையில் உள்ளது. ஐபிசியின் 304ஏ (அலட்சியத்தால் மரணம்) பிரிவின் கீழ் நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்” என்று விளக்கம் அளித்தார்.
உத்தவ் தாக்கரேவின் மாடோஸ்ரீ கனவு வீடு செப்டம்பர் 2018 இல் தொடங்கப்பட்டது. இது பாந்த்ரா கிழக்கில் உள்ள கலாநகரில் 7-அடுக்குக் கட்டிடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கட்டப்படும் புதிய வீட்டில் தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..2000 ரூபாய் நோட்டு: சீறிய முதல்வர் ஸ்டாலின்.! திமுகவினரின் சாராய ஆலை விவகாரத்தை தூசி தட்டும் அண்ணாமலை