Fancy Number : ஸ்கூட்டி விலை ரூ.90 ஆயிரம்.. ஆனா வண்டி நம்பர் விலை ரூ.1.12 கோடி - யார்ரா நீங்கல்லாம்.?

By Raghupati R  |  First Published Feb 22, 2023, 8:45 PM IST

தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட எண், தங்களது பிறந்த நாள், வருடம் கொண்ட எண் என விதவிதமான எண்களை கேட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, குறிப்பிட்ட எண்ணுக்காக கடும் போட்டி ஏற்படுகிறது.


சமீப காலமாக வாகனங்களுக்கான பேன்சி எண் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் நியூமராலஜி மற்றும் பிற காரணங்களுக்காக வாகனங்களுக்கு பேன்சி எண் வாங்கி வருகிறார்கள்.

சிலர் தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட எண், தங்களது பிறந்த நாள், வருடம் கொண்ட எண் என விதவிதமான எண்களை கேட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, குறிப்பிட்ட எண்ணுக்காக கடும் போட்டி ஏற்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் அந்த எண்ணை ஏலத்தில் விடுகிறார்கள்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..நாம் தமிழர் கட்சியில் இணையும் காயத்ரி ரகுராம்.? நேற்று திருமா.. இன்று சீமான் - சந்திப்பின் பின்னணி என்ன.?

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சம்லா மாவட்டத்தில் உள்ள கோட்கேய் பகுதியில் போக்குவரத்து அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள பேன்சி நம்பர்கள் சமீபத்தில் ஆன்லைனில் ஏலத்தல் விடப்பட்டது. இந்த பேன்சி நம்பர்களுக்கு எல்லாம்  ஆயிர ரூபாயில் இருந்து ஏலம் தொடங்கியது.

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக (HP 99-999 series) எண் தான் ரூ.1.12 கோடிக்கு  ஏலம் போயுள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு ஏலம்  போனது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு பணம் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கியது ஒரு கார் என்றால் கூட பராவாயில்லை. ஆனால் ஒரு 90,000 ரூபாய் ஸ்கூட்டிக்கு ரூ.1.12 கோடி தொகை கொடுத்து நம்பர் பிளேட் வாங்கியது அனைவரையும் வாய் அடைக்க வைத்தது.

இதையும் படிங்க..ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்த்து திமுகவுக்கு பயமா.? முதல்வரை எது பயமுறுத்துகிறது.? பாஜக குஷ்பு அதிரடி

அதுமட்டுமின்றி, HP 99-099 என்ற எண் ரூ.21.6 லட்சத்திற்கும், HP 990005 என்ற எண் ரூ.20.1 லட்சத்திற்கும்,  HP 990003 என்ற எண் ரூ.10.5 லட்சத்திற்கும் ஏலம்  போனது. மேலும், HP-990004  என்ற எண் ரூ.9.97 லட்சத்திற்கும், HP-990000 என்ற எண் ரூ.1.72 லட்சத்திற்கும் ஏலம் போயின. இவையெல்லாம் தான் லட்ச ரூபாயில் ஏலம் போனது என்று கூறப்படுகிறது.

மேலும், , HP-990006 மற்றும் HP-990008 என்ற எண் ரூ.75 ஆயிரத்திற்கும், HP-990069 மற்றும் HP-0099 என்ற எண் ரூ.50 ஆயிரத்திற்கும், HP-990111, HP-990999, HP-991111, HP-997777 ஆகிய எண்கள் தலா ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போயிருந்தது குறிப்பிடத்தக்கது. 26 பேர் பங்கேற்ற ஏலத்தில் அதிகபட்சமாக இமாச்சலை சேர்ந்த நபர் தான் அவரது ஸ்கூட்டிக்கு ரூ.1.12 கோடி கொடுத்து பேன்சி நம்பர் பிளேட் வாங்கியுள்ளார்கள். இந்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..ச்சீ.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. உடந்தையாக இருந்த அண்ணன் - கண்ணீருடன் புகார் கொடுத்த மகள்

click me!