தமிழகம் உள்ளிட்ட13 மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள்… விரைந்து முடிக்க பிரதமர் மோடி உத்தரவு!!

By Narendran S  |  First Published Feb 22, 2023, 8:16 PM IST

தமிழகம் உள்ளிட்ட13 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து முடிக்க துறை அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 


தமிழகம் உள்ளிட்ட13 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து முடிக்க துறை அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 41 ஆவது பிரகதி கூட்டத்தில், தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 41,500 கோடி ரூபாய் மதிப்பிலான 9 முக்கியமான உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார். தமிழகம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் 3 திட்டங்களும், ரயில்வே அமைச்சகத்தின் 2 திட்டங்களும், மின்சாரம், நிலக்கரி, பெட்ரோலியம், சுகாதாரம் ஆகிய அமைச்சகங்கள் சார்பில் தலா ஒரு திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: சிவசேனா விவகாரம் - தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Tap to resize

Latest Videos

இந்த 9 முக்கிய திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டதோடு பிரதமரின் விரைவு சக்தி இணையதளத்தை உட்கட்டமைப்பு திட்டங்களின் திட்டமிடலுக்குப் பயன்படுத்துமாறு துறை அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு விரைந்து தீர்வு கண்டு திட்டங்களை விரைந்து நிறைவேற்றுமாறும் அவர் வலியுறுத்தினார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: எஞ்சினில் எண்ணெய் கசிவு! அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

அமிர்த சரோவர் எனப்படும் நீர் நிலைகள் இயக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி, 50,000 நீர் நிலைகள் தொடர்பான பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற வட்டார அளவில் கண்காணிப்புப் பணிகள் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தார். இதுவரை நடைபெற்ற பிரகதி கூட்டங்களில் ரூ.15.82 லட்சம் மதிப்பிலான 328 திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!