எஞ்சினில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம் அவசரமாகத் ஸ்பெயினில் தரை இறக்கப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமான எஞ்சினில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புதன்கிழமையன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நீவார்க் நகரில் இருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வந்து வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI106) நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஒரு எஞ்சினில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போயிங் 777-300ER ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் சுமார் 300 பயணிகள் இருந்தனர். எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டதும் அருகில் இருந்த ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவசரத் தரையறக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும் விமானத்தில் இருந்த எல்லா பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பிறகு விமானத்தில் இருந்த பழுது நீக்கும் பணி தொடங்கியது. அப்போது விமானத்தின் இரண்டாவது எஞ்சினில் எண்ணெய் கசிவு உள்ளது என்று கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
கடந்த திங்கட்கிழமை நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் லண்டனில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த ஒருவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் அந்த விமானம் லண்டனில் தரையிறக்கப்பட்டு 6-7 மணிநேர தாமத்துக்குப் பின் டெல்லி வந்தடைந்தது.
Sri Lanka Elections: வாக்குச்சீட்டு அச்சடிக்க நிதி இல்லை! இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிறதா?