Wife Killed Husband : புனே நகரில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில், 36 வயது நபர் ஒருவர், தனது மனைவியால் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிகுந்த நிலையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த அந்த நபர் கட்டுமான துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலதிபரான நிகில் கண்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், தனது மனைவி ரேணுகா (38 வயது) என்பவரை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இறந்த நிகிலை விட அவரது மனைவி 2 வயது மூத்தவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு துபாய்க்கு அழைத்துச் செல்ல மறுத்ததால், அந்த பெண், தனது கணவரின் மூக்கில் பலமாக குத்தியதில், அந்த 36 வயது நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் வானவ்டி பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அவர்களது சொகுசு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொச்சி பல்கலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி; 40 க்கும் மேற்பட்டோர் காயம்
இதுகுறித்து வானவடி காவல்நிலையத்தில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில், ரேணுகாவை பிறந்தநாள் கொண்டாட நிகில் துபாய்க்கு அழைத்துச் செல்லாததால் தம்பதி இடையே சண்டை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது".
"தனது பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு விலை உயர்ந்த பரிசுகளை அவர் வழங்கவில்லை என்று கூறி இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் சிலரின் பிறந்தநாளை கொண்டாட டெல்லி செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்திற்கும் சாதகமாக பதில் அளிக்காததால் தனது கணவர் மீது கோவம்கொண்டிருந்தார்" என்றும் அவர் கூறினார்.
மேலும், "வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட சண்டையின் போது ரேணுகா, நிகிலின் முகத்தில் குத்தியுள்ளார். அவர் குத்தியதில் பலமாக காயமடைந்த நிகிலின் மூக்கு மற்றும் சில பற்கள் உடைந்தன. அதிக ரத்தப்போக்குடன் நிகில் சுயநினைவை இழந்தார்" என்று போலீசார் தெரிவித்தனர். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிர் பிறந்துள்ளது.
தற்போது, போலீசார் ரேணுகா மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, மேல் விசாரணைக்காக அவரை கைது செய்துள்ளனர்.