தெலங்கானா மாநிலம், வாரங்கலில் கார் இன்ஜினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
காரின் இன்ஜினில் தீப்பிடித்ததில், அதில் மறைத்து வைக்கப்பட்ட பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 24), வாரங்கலின் பொல்லிகுண்டாவில் (கிராமப்புறம்) வாக்தேவி பொறியியல் கல்லூரி அருகே இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
கார் இன்ஜினில் இருந்து புகை வெளியேறியதைத் தொடர்ந்து தெரியாத காரணத்தால் தீப்பிடித்தது. புகை வருவதைக் கண்ட டிரைவர், கரன்சி மூட்டைகளை பையில் திணித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். தீப்பிடித்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் காரை நோக்கி விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், காரின் என்ஜின் பெட்டிக்குள் ஒரு சில பண மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர், அதை ஓட்டுநர் அவசரமாக விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. தகவல்களின்படி, முதற்கட்ட விசாரணையில், மறைத்து வைக்கப்பட்ட தொகை தோராயமாக ரூ.30 முதல் 50 லட்சம் என்று கூறப்படுகிறது.
மேலும் நடந்துகொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தல் சோதனைகளுக்கு இடையே போலீஸ் சோதனைகளைத் தவிர்ப்பதற்காக என்ஜினில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வாரங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ரூ.490 கோடி சொத்து மதிப்பு.. இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர்தான்.. யார் தெரியுமா?