மாணவிகள் உள்ளாடை இப்படித்தான் இருக்கணும்! கட்டுப்பாடு விதித்த தனியார் பள்ளி! அதிர்ச்சியில் பெற்றோர்...

First Published Jul 5, 2018, 1:26 PM IST
Highlights
Pune School Issues Diktat On Colour Of Girls Underwear Says Intent Pure


பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகளின் உள்ளாடைகளுக்கு பள்ளி நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் விஷ்வ சாந்தி குருகுலம் என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, ஆடைகள் பற்றி புதிய கட்டுப்பாடுகளை பள்ளி நிர்வாகம் விதித்துள்ளது. 

நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி குறிப்பேட்டில் ஒரு சில புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மாணவிகளுக்கான ஆடை கட்டுப்பாடும் ஒன்று.

வெள்ளை மற்றும் பழுப்பு நிற உள்ளாடைகள் மட்டுமே மாணவிகள் அணிய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மாணவிகள் கழிவறைக்கு செல்லவும் கால நிர்ணயம் செய்யப்ட்டுள்ளது.

குடிநீர் அருந்த வேண்டும் என்றால் அதற்கொரு நேரம் குறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால்
ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

பள்ளியின் புதிய விதிமுறைகளை குறித்த அட்டவணையை ஏற்று, பெற்றோர்கள் கையெழுத்திட வேண்டும் என்றும், அப்படி இல்லாவில்லாட்டால் கடுமையாக
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அட்டவணையில் எச்சரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து, பள்ளி நிர்வாகம் கூறும்போது, மாணவிகளின் பாதுகாப்பு கருத்தியே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ளது.

click me!