ரூபாய் நோட்டு விவகாரம் : தபால் நிலையங்களில் ரூ.32 ஆயிரம் கோடி டெபாசிட்..!!!

First Published Nov 27, 2016, 3:02 PM IST
Highlights


பிரதமர் மோடியின் செல்லாக்காசு அறிவிப்புக்குப் பின், நாட்டில் உள்ள 1.55 லட்சம் தபால்நிலையங்களில் கடந்த 24-ந் தேதி வரை ரூ.500, ரூ1000 நோட்டுகள் மூலம் ரூ. 32 ஆயிரத்து 631 கோடியை மக்கள்டெபாசிட் செய்துள்ளனர்.

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி புழக்கத்தில் உள்ள ரூ. 500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை தபால்நிலையங்கள், வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 10-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை தபால் நிலையங்களில் செய்யப்பட்ட டெபாசிட்  குறித்து அஞ்சல்துறையின் செயலாளர் பி.வி. சுதாகர் கூறுகையில், “ கடந்த 10-ந் தேதியில் இருந்து 24-ந்தேதி வரை மக்கள் 578 லட்சம் எண்ணிக்கையிலான ரூ.1000, ரூ500 நோட்டுகளை ரூ.3 ஆயிரத்து 680 கோடிக்கு மாற்றி புதிய நோட்டுகளைப் பெற்றுள்ளனர். 43.48 கோடி பழைய ரூபாய்கள் மூலம்( எண்ணிக்கை) ரூ. 32 ஆயிரத்து 631 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், தபால்நிலையத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்து 583 கோடி பணம்

நாடுமுழுவதும் 1.55 லட்சம் தபால்நிலையங்கள் உள்ளன. இதில் 1.30 தபால்நிலையங்கள் கிராமங்களிலும், மீதமுள்ளவை நகர்புறங்களில் உள்ளன. இதில் 88 சதவீத பரிமாற்றங்கள் கிராமப்புறங்களில் நடந்துள்ளன. இந்த அறிவிப்புக்கு பின், சேமிப்புகணத்து, ரெக்கரிங் டெபாசிட், வருவாய்திட்டங்கள், உள்ளிட்டவற்றில் சேமிப்புகளை ஏற்பதில்லை. சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களின் பணம் மட்டுமேடெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

click me!