முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் குறட்டை விட்ட காக்கிகள்... வைரலாகும் வீடியோ!

Oct 16, 2018, 1:27 PM IST

பீகாரில் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் உயரதிகாரிகள் தூங்கி வழிந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பீகாரில் இந்தாண்டு துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்க்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் பாட்னா வில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை உயரதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் போது காவல்துறை அதிகாரிகள் சிலர் தூங்கி வழிந்தனர். காக்கிகளின் புகைபடங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.