பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 24) மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் செல்கிறார்.
பிரதமர் மோடி ஏப்ரல் 24 ஆம் தேதி மத்தியப் பிரதேசம் சென்று ரேவாவில் நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்கிறார்.
பஞ்சாயத்து நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் மோடி அரசின் முனைப்புடன் செயல்படுகிறது. 14வது நிதிக் கமிஷன் பரிந்துரைகளை பின்பற்றி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப்பகிர்வை மத்திய அரசு அதிகரித்தது வருகிறது. 15வது நிதிக் கமிஷன் பரிந்துரைத்தபடி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொத்த மானியமாக ரூ.4.36 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இது முந்தைய நிதி ஆணையம் வழங்கியதை விட இரண்டு மடங்கு அதிகம்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினத்தில் பிரதமர் மோடியால் ஸ்வாமித்ரவா (SVAMITVA) திட்டம் தொடங்கப்பட்டது. இது கிராமப்புறங்களில் சொத்தின் தெளிவான உரிமையை நிறுவுவதற்கான சீர்திருத்த நடவடிக்கையாகும். கிராமங்களில் வீட்டு உரிமையாளர்களுக்கு உரிமைகள் பதிவு செய்துகொடுக்க இத்திட்டம் உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம் 1.25 கோடி சொத்துச் சான்றுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது! அசாம் சிறையில் அடைக்க ஏற்பாடு!
mActionSoft திட்டம் மூலம் இயற்கை வளங்களை ஜியோ-டேக்கிங் செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. நீர் சேகரிப்பு, வறட்சி தடுப்பு, சுகாதாரம், விவசாயம் தொடர்பான அரசின் அனைத்து பணிகள் பற்றிய தகவல்களின் களஞ்சியமாக இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக கிராம பஞ்சாயத்து மட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க, கிராம ஊர்ஜா ஸ்வராஜ் இயக்கத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த முன்முயற்சியின் மூலம், கிராம பஞ்சாயத்துகள் எரிசக்தியில் தன்னிறைவு அடைந்து, நுகர்வு மட்டும் அல்லாமல் எரிசக்தி உற்பத்தி செய்யவும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல்மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பு: ஐ.நா. காலநிலை அறிக்கையில் எச்சரிக்கை
2020 ஆம் ஆண்டில் பிரதமரால் தொடங்கப்பட்ட இ-கிராம் ஸ்வராஜ் போர்டல் நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு வழிவகுத்தது. இது கிராம பஞ்சாயத்துகளின் அனைத்து டிஜிட்டல் தேவைகளுக்கும் ஒரே தளமாக செயல்படுகிறது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான பஞ்சாயத்துகள் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன. இன்று வரை ரூ.1.35 லட்சம் கோடிக்கு மேல் ஆன்லைனில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் பஞ்சாயத்துகளால் கிட்டத்தட்ட ₹50,000 கோடி ஆன்லைனில் செலவிடப்பட்டது.
இ-கிராம் ஸ்வராஜ் திட்டத்துடன் அரசு இ-மார்க்கெட்ப்ளேஸ் ஒருங்கிணைப்பு மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேம்படுகிறது. இது வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, உள்ளூர் விற்பனையாளர்கள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது.
திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி கொடூரக் கொலை! 4 ஆண்டு லிவ் இன் வாழ்க்கையில் நேர்ந்த துயரம்!