புதிய நாடாளுமன்றத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி... பணிகள் குறித்து கட்டிட தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்!!

By Narendran SFirst Published Mar 30, 2023, 7:31 PM IST
Highlights

புதிய நாடாளுமன்றத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கட்டிட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

புதிய நாடாளுமன்றத்திற்கு திடீரென வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி, கட்டிடத்தை ஆய்வு செய்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்த பிரதமர் மோடி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கட்டிட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் இரு அவைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தேவை என்று கருதி மோடி அரசு தனது பணியைத் தொடங்கியது. தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதனால் தற்போது கட்டுப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் தேவைக்கேற்ப பல்வேறு மாற்றங்களும்  வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ராகுல் விவகாரத்தில் அமித்ஷா தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார்… மல்லிகார்ஜுன் கார்கே சாடல்!!

 பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. அதேபோல் புதிய தொழில்நுட்பத்தை ஏற்படுத்த முடியாது. இதற்காக சுமார் 64500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மக்களவையில் 888 இடங்களும், ராஜ்யசபாவில் 384 இடங்களும் கொண்ட புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாட்டில், இரண்டு நிகழ்வுகளின் கூட்டு அமர்வில் 1272 எம்.பி.க்கள் அமர முடியும். இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தை அறிமுகப்படுத்த அரசியலமைப்பு மண்டபம், நூலகம், சமிதி க்ஷேத்ரா மற்றும் கேன்டீன்கள் இருக்கும். ரூ.1,250 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் இருக்கும். பழைய கட்டிடம் வட்ட வடிவில் இருந்தது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் நில அதிர்வு ஆகியவையை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தொடங்கியது மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு... ஏப்.17 கடைசித் தேதி!!

மிக முக்கியமாக, இந்த பாராளுமன்ற கட்டிடம் அடுத்த 150 ஆண்டுகளை கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இருக்கும். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டு, பணிகளை ஆய்வு செய்தார். புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் இருந்த பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மேஜைகள், நடைபாதைகளில் உள்ள இடைவெளிகளை பார்வையிட்டார். மேலும் அங்கு பணிபுரியும் கட்டிட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் பாடலைப் பாடிய மம்தா!

இதையும் படிங்க: நேர்மைக்காக விருது பெற்ற பெண் போலீஸ், லஞ்சம் வாங்கிய போது கைது!

click me!