ராகுல் விவகாரத்தில் அமித்ஷா தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார்… மல்லிகார்ஜுன் கார்கே சாடல்!!

By Narendran SFirst Published Mar 30, 2023, 5:49 PM IST
Highlights

மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நிராகரித்துள்ளார். 

மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நிராகரித்துள்ளார். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் ராகுல்காந்தி,  அனைத்து திருடர்களும் எப்படி மோடி என்ற குடும்ப பெயரை வைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் பாடலைப் பாடிய மம்தா!

அவரின் இந்த கருத்து சர்ச்சையானது. இதனிடையே ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தொடங்கியது மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு... ஏப்.17 கடைசித் தேதி!!

இந்த நிலையில் மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நிராகரித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்துறை அமைச்சர் தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேகம் அதன் பின்னணியில் அரசு இருப்பதை காட்டுகிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கவலைப்படவில்லை. கட்சியின் சட்டப் பிரிவு இது குறித்து விசாரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

click me!