கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தொடங்கியது மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு... ஏப்.17 கடைசித் தேதி!!

By Narendran SFirst Published Mar 30, 2023, 5:14 PM IST
Highlights

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான  விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான  விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் மீதம் இருக்கும் காலியிடங்கள் பொதுத்தரப்பினரை கொண்டு நிரப்படும். நாடு முழுவதும் ஆயிரத்து 245 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 59 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப்பதிவு கடந்த 27ம் தேதி முதல் தொடங்கியது.

இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் பாடலைப் பாடிய மம்தா!

ஏப்ரல் 17 விண்ணப்பிக்க கடைசித் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.17 அன்று மாலை 7 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு ஆஃப்லைன் முறையில் ஏப்ரல் 3 ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. இந்த விண்ணப்பப் பதிவுக்கு ஏப்.12 ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பட்டியல் ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியாகும். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: நேர்மைக்காக விருது பெற்ற பெண் போலீஸ், லஞ்சம் வாங்கிய போது கைது!

11 ஆம் வகுப்பு நீங்கலாக அனைத்து வகுப்புகளுக்குமான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 30 ஆம் தேதி கடைசி தேதி என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் பிறப்புச் சான்றிதழ், மாணவரின் புகைப்படம் ஆகியவை வைத்திருக்க வேண்டும். மேலும் ஆவணங்கள் அதிகபட்சம் 256 கே.பி. ஆக இருக்க வேண்டும். .jpeg அல்லது .pdf வடிவில் புகைப்படங்கள் இருக்க வேண்டியது அவசியம். மேலும் இதுக்குறித்த விவரங்களை அறிய https://kvsonlineadmission.kvs.gov.in/instruction.html என்ற இணைய முகவரியில் பார்த்துக்கொள்ளலாம். 

click me!