மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் பாடலைப் பாடிய மம்தா!

By SG BalanFirst Published Mar 30, 2023, 5:04 PM IST
Highlights

கல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரவீந்திரநாத் தாகூர் பாடலைப் பாடி அனைவரையும் கவர்ந்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு எதிராக நடத்திவரும் போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்த பாடலைப் பாடினார்.

மேற்கு வங்க மாநிலத்துக்கு நிதி வழங்குவதில் இழுபறி விளைவிப்பதாகக் கூறி கல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை இரண்டாம் நாளாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் மாலை 7 மணியுடன் நிறைவடையும் எனத் தெரிகிறது.

இந்த தர்ணா போராட்டத்தின்போது மம்தா பானர்ஜி தன் ஆதரவாளர்களுடன் 'எபார் டோர் மோரா கங்கே' என்ற ரவீந்திரநாத் தாகூரின் எழுதிய வங்க மொழிப் பாடலைப் பாடினார். அவர் சிரித்துக்கொண்டே பாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

ஆபாசப் படம் பார்த்து சிக்கிய மற்றொரு பாஜக எம்எல்ஏ! இந்த முறை திரிபுரா சட்டப்பேரவையில்!

புதன்கிழமை இந்தப் போராட்டத்தைத் தொடங்கிய மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கல்கத்தாவின் ரெட் ரோட்டில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட வீட்டுவசதி, பொதுப்பணித் துறைகளின் பிற திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தியது வைத்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றிணைந்து போராட நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களையும் அவர் வலியுறுத்தினார். அவருடன் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் அரூப் பிஸ்வாஸ் உட்பட பல கட்சித் தலைவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேற்கு வங்க காவல்துறை தெரிவித்துள்ளது.

அட்சய பாத்திரம் திட்டத்தில் ஊழலா? ஆளுநரிடம் விளக்கம் கேட்கும் நிதியமைச்சர்!

click me!