ராகுல் காந்திக்கு மீண்டும் தலைவலி; பாட்னா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன்!!

By Dhanalakshmi GFirst Published Mar 30, 2023, 3:40 PM IST
Highlights

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி பாட்னாவில் இருக்கும் எம்எல்ஏ-எம்பி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் எம்பி ராகுல் காந்திக்கு அந்த நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சூரத் நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்து இருந்தது. இதையடுத்து, ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பி பதவியை இழந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில், ''எல்லா திருடர்களுக்கும் எப்படி 'மோடி' என்ற பெயர் பொதுவானதாக இருக்கிறது'' என்று கர்நாடகாவில் இருக்கும் கோலார் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார். இது மோடி சமூகத்தையே இழிவுபடுத்தியதாக சூரத் மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்பியுமான சுசில்குமார் மோடி பாட்னா எம்எல்ஏ-எம்பி நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசராணைக்கு ஏற்றுக் கொண்ட பாட்னா நீதிமன்றம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.  

வணிகப் போட்டி வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,338 கோடி அபராதம் கட்டாயம்

தனது மனுவில், ராகுல் காந்தி மீது குற்றவியல் அவதூறுகளை சுசில்மோடி சுமத்தியுள்ளார். இவரைத் தவிர முன்னாள் சாலை கட்டமைப்பு அமைச்சர் நிதின் நவீன், பாங்கிபூர் எம்எல்ஏ., பாஜக தலைவர் சஞ்சீவ் சவுராசியா, மணிஷ் குமார் ஆகியோர் இந்த வழக்கில் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.  

இந்த சம்மனை அடுத்து பாட்னா எம்எல்ஏ-எம்பி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகலாம் என்று கூறப்படுகிறது. 

டெல்லி, மகாராஷ்ராவில் 50 சதவீதம் அதிகரித்த கொரோனா பாதிப்பு.. என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

click me!