இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,016 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மகாராஷ்ராவில் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,016 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு ஒரே நாளில் சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 686 பேர், மகாராஷ்டிராவில் 483 பேர், குஜராத்தில் 401, டெல்லியில் 300 பேர், இமாச்சலபிரதேசத்தில் 255 பேர், கர்நாடகாவில் 215 பேர், அரியானாவில் 120 பேர், தமிழ்நாட்டில் 112 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் 3 பேர், டெல்லியில் 2 பேர், இமாச்சலபிரதேசத்தில் ஒருவர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு முதல் முறையாக நேற்று 300ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வேகமாக பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.