
இந்த விபத்து இந்தூரில் இருக்கும் சினே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ பாலேஷ்வர் கோவிலில் நடந்துள்ளது. இன்று ராம நவமி என்பதால ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்திருந்து வழிபட்டனர். கோவிலுக்குள் இருந்த கிணற்றின் மீது பலரும் ஏறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, எடை தாங்காமல் கிணற்றின் உரை உள் வாங்கியது. இதில், கிணற்றின் மீது நின்று கொண்டு இருந்தவர்கள் அப்படியே கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த சம்பவம் இந்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
மொத்தம் 25 சிக்கி இருப்பதாக கூறப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் உள்ளூர் ஆட்கள் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளில் இறங்கினர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த விபத்துக்கு வருத்தமும் தெரிவித்து இருந்தார்.
இந்தூர் பாஜக எம்பி சங்கர் லால்வானி கூறுகையில், "விபத்து நடந்த இடத்தில் நிர்வாக குழுக்கள் உள்ளன. சிக்கியவர்களை மீட்பதே எங்களது முன்னுரிமை. கோவில் மிகவும் பழமையானது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
பிரதமர் மோடியும் வருத்தம் தெரிவித்து டுவீட் பதிவு செய்து இருந்தார். அவர் தனது பதிவில், ''இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். முதல்வர் சிவராஜ் சௌஹான் ஜியிடம் பேசி, நிலைமையை புதுப்பித்தேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித கதியில் முன்னெடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்'' என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 11 மொழிகளில் போஸ்டர்கள்! பிரதமர் மோடியை வெளுத்து வாங்கும் ஆம் ஆத்மி!
Video: பிரதமர் மோடி படத்துக்கு முத்திட்டு நன்றி தெரிவிக்கும் வயதான விவசாயி!