"ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாறிய டீ கடை" - செல்போன் மூலம் கட்டணம் செலுத்தலாம்

First Published Dec 21, 2016, 1:05 PM IST
Highlights


பணத்தட்டுப்பாடு காரணமாக திருமலையில் உள்ள ஒரு டீ கடை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறியுள்ளது. அசோக் நானி என்பவர் நடத்தும் இந்த டீ கடை, கடந்த 2 மாதமாக நீடிக்கும் பணத்தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர், தனதுகடையை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்றிவிட்டார்.

இங்கு டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் டீ குடித்தற்கான பணத்தை எளிதாக செலுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சில்லறை தட்டுப்பாடு ஒரு பிரச்சனையே இல்லை என்கிறார் அசோக் நானி.

தொழில்நுட்பங்களை உள்வாங்க தொடங்கிவிட்டால் சில்லறை ஒரு பிரச்சனை இல்லை என்பதற்கு இந்த டிஜிட்டல் தேநீர் கடை ஒரு உதாரணமாகும்.

click me!