modi in kerala : பிரதமர் மோடி இன்றும், நாளையும் கேரளாவில் பயணம்: கொச்சி மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்

By Pothy Raj  |  First Published Sep 1, 2022, 2:07 PM IST

பிரதமர் மோடி இன்றும்,நாளையும் இருநாட்கள் கேரளாவில் பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.


பிரதமர் மோடி இன்றும்,நாளையும் இருநாட்கள் கேரளாவில் பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.

குறிப்பாக கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடக்கம், புனலூர் - கொல்லம் புதிய மின்மய அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிப்பு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கஉள்ளார்.

Tap to resize

Latest Videos

Dawood Ibrahim age: ‘நிழல்உலக தாதா’ தாவுத் இப்ராஹிம் பற்றி தகவல் அளித்தால் ரூ.25 லட்சம் பரிசு: என்ஐஏ அறிவிப்பு

கேரளாவுக்கு இன்று மாலை வரும் பிரதமர் மோடி, கலாடியில் உள்ள ஆதி சங்கரா ஜென்மபூமி கோயிலில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். 

மாலை 6மணி அளவில் கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில் 2வது கட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதோடு எஸ்என் ஜங்ஷன், வடக்கேகோட்டா  மெட்ரோ ரயில் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமதுகான்,அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்கிறார்கள். 

ncrb: இந்தியாவில் நாள்தோறும் 84 கொலை, 11பேர் கடத்தல்: உ.பி. முதலிடம் என்சிஆர்பி தகவல்

இது தவிர மதுரை கோட்ட எல்கைக்குள் உள்ள கேரள மாநில பகுதி புனலூர் - கொல்லம் அகல ரயில் பாதை ரூபாய் 76 கோடி செலவில் மின்மயமாக்கப்பட்டது. இந்த புதிய மின்மயப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார், தவிர விதமாக ஒரு சிறப்பு ரயிலையும் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். இது தவிர கோட்டயம்-எர்ணாகுளம், கொல்லம்-புனலூர் இடையே சிறப்பு ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

நாளை(செப்2.) கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். 

கொச்சி மெட்ரோ 2 கட்ட திட்டம் என்பது, ஜேஎல்என் அரங்கம் முதல் இன்போபார்க், காக்கநாடு வரை அமைக்கப்பட உள்ளது. 11.1 கி.மீ தொலைவுக்கு 11 ரயில்நிலையங்கள் உள்ளது போன்று திட்டமிடப்பட்டுள்ளது.

flood in pakistan :பிரதமர் மோடியின் மனிதநேயத்துக்கும், அக்கறைக்கும் நன்றி: பாகிஸ்தான் பிரதமர் நெகிழ்ச்சி

கொச்சி மெட்ரோ1 திட்டம் 27 கி.மீ தொலைவு கொண்டது, 24 ரயில்நிலையங்களைக் கொண்டதாகும். பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் இருவழித்தடங்களிலும் ரயில்போக்குவரத்து தொடங்கும். எஸ்என் ஜங்ஷன் மற்றும் வடக்கேகோட்டா நிலையங்களில் தினசரி ஒருலட்சம் பயணிகள் வந்து செல்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டம் தவிர்த்து ரூ.1059 கோடி செலவில் 3 ரயில்நிலையங்களை மேம்படுத்தும்  பணிக்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டி வைக்கிறார். மேலும், ரூ.750 கோடியில் நிறைவடைந்த குருப்பன்தரா-கோட்டயம்-சிங்காவனம் பிரிவில் 27கி.மீ தொலைவுக்கு இரட்டை ரயில்தடம் நிறைவு அடைந்துள்ளது. அதையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளார். 

click me!