மணிப்பூரில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்... வீடியோ வெளியானதும் சஸ்பெண்ட்!

By SG Balan  |  First Published Jul 25, 2023, 7:40 PM IST

வைரல் வீடியோவில் சீருடையில் இருக்கும் ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரர் கையில் துப்பாக்கியுடன் பெண்ணை மிரட்டும் காட்சியைக் காணமுடிகிறது.


இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள மளிகைக் கடைக்குள் ஒரு பெண்ணை கேமராவில் பாலியல் வன்கொடுமை செய்த எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) தலைமைக் காவலர் சதீஷ் பிரகாஷ், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

கடையின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சீருடையில் இருக்கும் ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரர் கையில் INSAS துப்பாக்கியுடன் பெண்ணை மிரட்டும் காட்சியைக் காணமுடிகிறது.

Tap to resize

Latest Videos

85 நாட்களுக்குப் பின் மணிப்பூரில் இன்டர்நெட் தடை நீக்கம்! ஆனால் VPN பயன்படுத்தக் கூடாது!

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கியுடன் பெண்ணை மிரட்டிய நபர் தலைமை காவலர் சதீஷ் பிரசாத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். "சம்பவம் ஜூலை 20 அன்று இம்பாலில் பெட்ரோல் பம்ப் அருகே உள்ள கடையில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமை காவலர் சதீஷ் பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

On 20th July 2023 a molestation case recorded in the departmental store at PCTC pump committed by a BSF soldier on a young 18 year old Nepali girl. - Imphal Manipur pic.twitter.com/k8kYl4P6xk

— Meitei Students' Association Bengaluru (@SubashSana52990)

"அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன" என்று கூறும் அவர், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் பிரகாஷுக்கு எதிராக எல்லை பாதுகாப்புப் படை விசாரணையைத் தொடங்கியுள்ளது எனவும் தெரிவிக்கிறார்.

காப்புரிமை மீறல்... X என்று பெயரை மாற்றி பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட எலான் மஸ்க்!

கடந்த வாரம், மாநிலத்தின் தௌபல் மாவட்டத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்ட வீடியோ வைரலாக பரவி, பெரும் சீற்றத்தைத் தூண்டியது. இந்த வழக்கில் இதுவரை ஒரு சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும் அனைத்து முயற்சிகளையும் மாநில காவல்துறை மேற்கொண்டு வருகிறது என்று விசாரணைக்கு பொறுப்பு வகிக்கும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக பல ஜீரோ எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பியவர்கள் விசாரணைக்கு வராததால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மணிப்பூர் காவல்துறை கூறியுள்ளது. மேலும், பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக மணிப்பூர் காவல்துறை சொல்கிறது. 

சந்தேகத்தால் மனைவியைக் கதறக் கதற கொன்ற மருத்துவர்! ஆயுள் தண்டனைக்கு வழிவகுத்த குழந்தையின் வாக்குமூலம்!

click me!