5வது கட்டத்தைக் கடந்த சந்திரயான்-3! ஆகஸ்ட் 1 முதல் நிலவை நோக்கிப் பயணம்! இஸ்ரோ அறிவிப்பு

By SG Balan  |  First Published Jul 25, 2023, 6:17 PM IST

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்கலத்தை ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

இதைப்பற்றி இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்கலம் இப்போது 1,27,609 கி.மீ. X 236 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்த நகர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்றும் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த நகர்வு நடைபெறும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

Tap to resize

Latest Videos

இதன் மூலம் சந்திரயான்-3 விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலகி நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்திரனை நெருங்கும் சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தேகத்தால் மனைவியைக் கதறக் கதற கொன்ற மருத்துவர்! ஆயுள் தண்டனைக்கு வழிவகுத்த குழந்தையின் வாக்குமூலம்!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திரயான் 3 வெண்கலம் ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. நிலவில் இதுவரை ஆய்வு செய்யப்படாத தென் துருவப்பகுதியில் விண்கலத்தை மென்மையான தரையிறக்கம் செய்யும் செய்யும் நோக்கில் சந்திரயான்-3 திட்டத்தை மேற்கொண்டிருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் விண்கலம் 3வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க முடிந்தது.

85 நாட்களுக்குப் பின் மணிப்பூரில் இன்டர்நெட் தடை நீக்கம்! ஆனால் VPN பயன்படுத்தக் கூடாது!

click me!