கர்நாடகா அமைச்சர்களுக்கு எதிராக சித்தராமையாவுக்கு கடிதம் எழுதிய 11 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்; துவங்கியதா ஆட்டம்?

By Dhanalakshmi G  |  First Published Jul 25, 2023, 5:53 PM IST

கர்நாடகாவில் துவங்கியது அரசியல் சர்ச்சை. அமைச்சர்கள் ஒத்துழைக்காததால் தங்களால் எந்த வேலையையும் முடிக்க முடியவில்லை என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
 


கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக சிங்கப்பூரில் திட்டமிடப்படுகிறது என்று நேற்றுதான் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவகுமார் தெரிவித்து இருந்தார். அதற்குள் இன்று சிக்கலும் தொற்றிக் கொண்டுள்ளது. 

கர்நாடகா மாநிலம் குல்பர்கா காங்கிரஸ் எம்எல்ஏ பிஆர் பாட்டீல் உள்பட 10 எம்எல்ஏக்கள் சித்தராமையாவுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ''மக்களின் நமபிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எங்களால் பணி செய்ய முடியவில்லை. 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எங்களது சட்டமன்ற தொகுதி பணிகளுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர். 

Latest Videos

undefined

கர்நாடக அரசை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பகீர்!

இத்துடன் பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை. மூன்றாவது நபரின் உதவியுடன்தான் சந்திக்க வேண்டியது இருக்கிறது. இதனால் மக்களின் ஆசைகளை, விருப்பங்களை, கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. மூன்றாவது நபரின் வாயிலாக எங்களுக்கு அமைச்சர்கள் செய்திகளை பகிருகின்றனர். நிதி திட்டங்களை அமைச்சர்களுடன் பகிர முடியவில்லை. உள்ளூர் எம்எல்ஏக்களாக இருந்தும், மூன்றாவது நபரின் வாயிலாக அமைச்சர்களை சந்திக்க வேண்டியது இருக்கிறது என்பது பெரிய ஏமாற்றமாக எங்களுக்கு இருக்கிறது.

அதிகாரிகளின் இடமாற்றத்திற்கான எங்களின் பரிந்துரை கடிதங்கள் பரிசீலிக்கப்படவில்லை. எந்த அதிகாரியும் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை. முதல்வர் அவசரமாக தலையிட்டு இந்த சிக்கலை தீர்த்து வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.  

85 நாட்களுக்குப் பின் மணிப்பூரில் இன்டர்நெட் தடை நீக்கம்! ஆனால் VPN பயன்படுத்தக் கூடாது!

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்தலில், 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்று இருந்தார். முதல்வருக்கு 11 எம்எல்ஏக்கள் கடிதம் எழுதி இருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவுக்கு, 'முதல்வரை எப்படி இறக்குவது அல்லது வீழ்த்துவது' என்று எனக்கு தெரியும் என, சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் சவால் விடுத்து இருந்த நிலையில் தற்போது இந்த சிக்கலும் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ளது. 

click me!