85 நாட்களுக்குப் பின் மணிப்பூரில் இன்டர்நெட் தடை நீக்கம்! ஆனால் VPN பயன்படுத்தக் கூடாது!

By SG Balan  |  First Published Jul 25, 2023, 4:35 PM IST

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் 85 நாட்களுக்குப் பிறகு இன்டர்நெட் சேவை நிபந்தனைகளுடன் மீண்டும் தொடங்குகிறது.


வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கொந்தளிப்புக்கு மத்தியில், இணைய சேவைகளுக்கான தடையை நிபந்தனையுடன் நீக்கி மணிப்பூர் உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த மே 3ஆம் தேதி முதல் இணையத் தடை அமலில் உள்ளது. இன்டர்நெட் தடை காரணமாக ஏடிஎம்களில் பணம் எடுப்பது உள்பட பல வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத சூழல் நிலவிவந்தது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிலும் இணைய சேவை இல்லாமல் வழக்கமான செயல்பாடுகள் முடங்கின.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இதனை மறுபரிசீலனை செய்யுமாறு பல தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. அதன்படி, அனைத்து சிக்கல்களையும் ஆய்வு செய்த மணிப்பூர் மாநில அரசு நிபந்தனைகளுடன் கூடிய பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை அனுமதித்துள்ளது.

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம் Mr. மோடி.. பிரதமரின் உரை - பதிலளித்த ராகுல் காந்தி!

அலுவலகங்கள், நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், வழக்கறிஞர்கள், சுகாதார வசதிகள், எரிபொருள் நிரப்பும் மையங்கள் பிராட்பேண்ட் இணைய சேவையை பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், மொபைல் இன்டர்நெட் சேவைக்கு தடை தொடர்கிறது. இது தொடர்பான மாநில அரசின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக விபிஎன் (VPN) பயன்படுத்தக்க கூடாது, ஏற்கெனவே விபிஎன் மென்பொருளை நிறுவியவர்கள் அதனை நீக்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் இன்டர்நெட்டில் தேடுபவதைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் வன்முறையைப் பரப்பக்கூடிய பதிவுகளைப் பகிர்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசு எச்சரித்துள்ளது.

என்னது.. 500 ரூபாய் நோட்டு செல்லாதா? மத்திய நிதியமைச்சகம் சொன்ன பதில் இதுதான்..

click me!