Neeraj chopra : ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.!!

Published : Jun 19, 2022, 12:04 AM IST
Neeraj chopra : ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.!!

சுருக்கம்

Neeraj chopra : அடுத்து நடந்த 2வது முயற்சியிலும் நீரஜ் சோப்ரா தவறு செய்தார். 3வது முயற்சியின்போது அவர் தவறி கீழே விழுந்தார். அது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் முதல் முயற்சியில் 86.69 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார். இந்த இலக்கை பின்னர் வந்த பிற போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை. 

அடுத்து நடந்த 2வது முயற்சியிலும் நீரஜ் சோப்ரா தவறு செய்தார். 3வது முயற்சியின்போது அவர் தவறி கீழே விழுந்தார். அது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனினும் அதில் இருந்து மீண்டு, அவர் காயமின்றி எழுந்து சென்றார். 

போட்டியின்போது தொடர் மழை பெய்ததால் ஈட்டி எறியும் வீரர்கள் அனைவருக்கும் சற்று சிரமம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் அதிக தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைத்தது.ஒலிம்பிக் தங்க பதக்கத்திற்கு பின் அவர் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : AIADMK : அதிமுகவில் திருத்தங்கள் செய்ய கூடாது.. நீதிமன்றத்திற்கு பறந்த மனு.. குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் !

இதையும் படிங்க : AIADMK : எடப்பாடிக்கு பதவியை விட்டு கொடுங்க ஓபிஎஸ்.. இதான் நியாயம் - ராஜன் செல்லப்பா அதிரடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!