
காவல் ஆய்வாளர் ஒருவரை வெட்டி கொலை செய்வதற்காக காத்ததிருந்த ரவுடி ஒருவனை 2 அடி நீள கத்தியால் அவரை வெட்ட முயலும் போது சினிமா பாணியில் சிங்கம் போல பாய்ந்து பிடித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அருண்குமார் (37). இவர் சம்பவத்தன்று ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுகுதன் என்ற ரவுடி சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்ததை பார்த்த இன்ஸ்பெக்டர் அருண்குமார் அந்த ரவுடியை மடக்கி பிடிக்க ஜீப்பை விட்டு கீழே இறங்கியுள்ளார்.
உடனே சுதாரித்துக்கொண்ட ரவுடி இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண்குமாரை வெட்டி கொலை செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் அருண்குமார் லாவகமாக அவனை பிடித்து கீழே தள்ளி கையில் இருந்த அரிவாளை பிடுங்கி மற்றொரு காவலரிடம் ஒப்படைத்தார்.
"
அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.