Agnipath Protest:வலுக்கும் அக்னிபத் எதிர்ப்பு போராட்டம்..பாதுகாப்புத்துறை அமைச்சர் முப்படை தளுபதிகளுடன் ஆலோசனை

By Thanalakshmi VFirst Published Jun 18, 2022, 2:18 PM IST
Highlights

மத்திய அரசு கொண்டுள்ள ராணுவத்திற்கு புதிதாக ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 

4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் எனும் புது திட்டத்தை கடந்த செவ்வாய்கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கொண்டுவந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

பீகார், ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம்,மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் போராட்டகாரர்கள் ரயிலுக்கு தீவைத்து எரித்துள்ளனர். பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தமிழகத்தில் அக்னிபத் எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: Agnipath Scheme Protest: அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு மாத ஊதியம் எவ்வளவு?

தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, மத்திய இந்த திட்டத்தில் சேரும் அக்னி வீரர்களுக்கு உச்ச வயது வரம்பிலிருந்து 3 ஆண்டுகள் தளர்வு அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் துணை ராணுவம், அசாம் ரைஃபிள் பிரிவில் 10 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இச்சூழலில் புதுதில்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்போதைய நிலைமையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பீகாரில்  இன்று முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 12 மாவட்டங்களில் இணையச்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் காரணமாக இதுவரை 7 ரயில்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Agnipath Protest: அக்னிபத் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10% ஒதுக்கீடு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..

click me!