Agnipath Protest: பாதுகாப்புத்துறை வேலைகளில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு.. மத்திய அரசு அறிவிப்பு

By Thanalakshmi VFirst Published Jun 18, 2022, 5:18 PM IST
Highlights

பாதுகாப்புத்துறை அமைச்சரக வேலைகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்திய கடலோர காவல்படை, பாதுகாப்பு துறையில் சிவிலியன் பதவிகளிலும், 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
ராணுவத்திற்கு புதிதாக ஆள் சேர்க்கும் திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீகார், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களுக்கு தீ வைப்பு, பொதுச் சொத்து சேதப்படுத்தல், ரயில் மறியல் என போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதனால் இன்று பாதுக்காப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பாதுகாப்பு துறையில் 10 சதவீத வேலைகளை அக்னி வீரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

மேலும் இந்திய கடலோர காவல்படை, பாதுகாப்பு துறையில் சிவிலியன் பதவிகள், 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். இந்த இட ஒதுக்கீடு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டுடன் கூடுதலாக இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஒப்புதலை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:Agnipath Protest:வலுக்கும் அக்னிபத் எதிர்ப்பு போராட்டம்..பாதுகாப்புத்துறை அமைச்சர் முப்படை தளுபதிகளுடன் ஆலோசனை
 
click me!