இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடா ? இறக்குமதிக்கு வாய்ப்பே இல்லை - மத்திய உணவுத்துறை அதிரடி விளக்கம்.!

By Raghupati RFirst Published Aug 21, 2022, 7:33 PM IST
Highlights

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக சமீப நாட்களாக உணவு தானிய உற்பத்தியானது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்தியாவில்  கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் எந்தவித பாதகமான தாக்கமும் ஏற்படவில்லை. ரஷ்யா - உக்ரைன் போரினால் கோதுமையின் ஏற்றுமதிக்கு அதிகமான விலையேற்றம் கண்டது. மேலும் வெப்ப அலையினால் பயிர் சேதமடைந்தது. இதனால் கோதுமையின் விலையில் ஏற்றம் கண்டது. 

மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் எந்தவித பாதகமான தாக்கமும் ஏற்படவில்லை. ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகும் கூட, உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் அதிகமாகவே தற்போது உள்ளது.

இந்திய அரசின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2021-22 நிதியாண்டில் உள்நாட்டில் கோதுமை உற்பத்தி 10.64 கோடி டன்னை எட்டியது. 2020-21 ஆண்டு கோதுமை உற்பத்தியான 10.96 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவு. இருப்பினும், 2016-17-லிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சராசரி ஆண்டு உற்பத்தியான 10.38 கோடி டன்னைக் காட்டிலும் கோதுமை உற்பத்தி அதிகமாகவே எட்டப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..தலையில் காயம்.. காண்டத்தை வைத்து கட்டு போட்ட வார்டு பாய் - அதிர்ச்சி சம்பவம்.!

இதனை ஜூலை 1ம் தேதி நரேந்திர சிங் தோமா் தெரிவித்திருந்தார். ‘தற்போது இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான கையிருப்பு நமது நாட்டிலே உள்ளது. மேலும், இந்திய உணவுக் கழகம் பொது விநியோகத்திற்கான போதுமான இருப்பையும் கொண்டுள்ளது’ என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

click me!