நிர்பயா ஏவுகணை சோதனை 4-வது முறையாகத் தோல்வி

First Published Dec 22, 2016, 6:47 AM IST
Highlights


 

நிர்பயா ஏவுகணை சோதனை 4-வது முறையாகத் தோல்வி

உள்நாட்டில் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நிர்பயா ஏவுகணையின் 4-வது சோதனையும் தோல்வியில் முடிந்தது.

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில்  அருகே உள்ள வீலர் தீவில் இந்த சோதனை நேற்று நடந்தது. நிர்பயா ஏவுகணை ஏவப்பட்ட 2 நிமிடங்களுக்குள் பாதை மாறி செல்லத் தொடங்கியது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஏவுகணையை ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச்செய்தனர்.

ஒட்டுமொத்தமாக, நிர்பயா ஏவுகணையின் 4-வது சோதனை முயற்சியும் படுதோல்விஅடைந்தது  என பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘நிர்பயா’ ஏவுகணையை  விமானம், நிலம், கடல் ஆகிய 3 இடங்களில் இருந்தும் இயக்க முடியும் .போர் விமானம் போல இருக்கும் ‘நிர்பயா’ ஏவுகணை  அணு குண்டுகளை வீசும் திறன் உடையது.

ரிமோட் மூலம் இயக்கலாம். தாக்குதல் நடத்தாமல், புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் கொண்டு வர வைக்கவும் முடியும் ‘நிர்பயா’ ஏவுகணை 1000 கி.மீ. வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் சக்தி படைத்தது. அக்னி ஏவுகணை வரிசையில் 3-வது ஏவுகணையாக ‘நிர்பயா’ உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

 

click me!