NEET UG 2023 : நீட் மருத்துவ கலந்தாய்வு எப்போது தொடங்கும்? விரைவில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு..

Published : Jun 30, 2023, 01:42 PM ISTUpdated : Jun 30, 2023, 01:59 PM IST
NEET UG 2023 : நீட் மருத்துவ கலந்தாய்வு எப்போது தொடங்கும்? விரைவில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு..

சுருக்கம்

இளநிலை நீட் தேர்வுக்கான மருத்துவ கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெசிய மருத்துவ ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீட் இளங்கலை தேர்வு என்பது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், நர்சிங் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். அதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் இளநிலை தேர்வு கடந்த மே 7-ம் தேதி நீநடைபெற்றது. சுமார் 20 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, இந்த தேர்வில், 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.44 லட்சம் பேரில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த நிலையில், முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்திருந்தனர்.

சென்னையின் புதிய கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்... யார் இவர்..? காவல்துறையில் கடந்து வந்த பாதை..

இந்த நிலையில் இளநிலை நீட் தேர்வுக்கான மருத்துவ கலந்தாய்வு, விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஜூலை 2-வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், கவுன்சிலிங் செயல்முறையின் குறிப்பிட்ட தேதிகள் மற்றும் விவரங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீட் கவுன்சிலிங் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெறுவதற்கு, தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் புதுப்பித்த நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதனிடையே தேசிய மருத்துவ ஆணையம், அனைத்து மாநில மருத்துவ கல்லூரி துணை வேந்தர்களுக்கும், மருத்துவ கல்வி செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் “ இளநிலை நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள், தேசிய தேர்வு முகமையிடம் இருந்து ஜூன் 20-ம் தேதி பெறப்பட்டன. தற்போது முடிவுகளை விநியோகிக்கும் பணியில் ஆணையம் ஈடுபட்டுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு (DME's). இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில், முடிவுகளை சேகரிக்க டெல்லியில் உள்ள தலைமை தங்கள் அலுவலகத்திலிருந்து வர ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனி தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுமுறை.. அதுவும் சம்பளத்துடன்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்! ஆக்ரா போலீஸ் அட்டூழியம்!
இண்டிகோ விமானத்தில் புகுந்த புறா! நடுவானில் பயணிகளுக்கு ஆச்சரியம்!