ஹெலிகாப்டரில் ஸ்பாட்டுக்கு சென்ற ராகுல்: நிவாரண முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஆறுதல்!

Published : Jun 30, 2023, 12:56 PM IST
ஹெலிகாப்டரில் ஸ்பாட்டுக்கு சென்ற ராகுல்: நிவாரண முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஆறுதல்!

சுருக்கம்

மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டம் மொய்ராங்கில் உள்ள இரண்டு நிவாரண முகாம்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. மைதேயி, குகி ஆகிய இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. மணிப்பூர் கலவரத்தில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் இயல்புநிலை திரும்ப வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கலவர பூமியாக காட்சியளிக்கும் அம்மாநிலத்துக்கு இரண்டு நாட்கள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார். இந்த நிலையில், மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டம் மொய்ராங்கில் உள்ள இரண்டு நிவாரண முகாம்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 9.30 மணியளவில் இம்பாலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மொய்ராங்கை அடைந்த ராகுல் காந்தி, அங்குள்ள இரண்டு நிவாரண முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களின் துயரங்களை கேட்டறிந்தார். இந்த இரு முகாம்களிலும் சுமார் 1,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும், இம்பாலில் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் ராகுல் காந்தி சந்திக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2024 தேர்தல் வியூகத்தை இறுதி செய்யும் பாஜக: தமிழ்நாட்டை கவர் செய்ய மெகா திட்டம்!

ராகுல் காந்தியுடன் மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திர சிங் மற்றும் முன்னாள் எம்பி அஜய் குமார் ஆகியோரும் உடன் சென்றனர். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே, 1944 ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தினர் மூவர்ண கொடியை ஏற்றிய நகரமாக மொய்ராங் வரலாற்று ரீதியாக அறியப்படுகிறது

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு நேற்று வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து சாலை மார்க்கமாக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற அவரை, அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தியின் கான்வாய் பிஷ்னுபூரில் அம்மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் அவரது கான்வாய் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, இம்பால் திரும்பிய ராகுல் காந்தி, ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருப்பவர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசினார். மணிப்பூரில் வெடித்த இனக் கலவரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் சுராசந்த்பூர் அறியப்படுகிறது. நிவாரண முகாம்களில் வசிப்பவர்களை சந்தித்த பிறகு ராகுல் கூறுகையில், “என்ன நடந்தது என்பது எனக்கு தெரிய வந்துள்ளது; அமைதியைக் கொண்டுவர முயற்சிக்கிறேன்” என்றார்.

நிவாரண முகாம் ஒன்றில் குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி, பின்னர், சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!