ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கே இன்றே கடைசி நாள் என்பதால் இன்று இணைக்க தவறும் நபர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு பல கட்டங்களாக அவகாசம் வழங்கி மக்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது. அந்த வகையில் தற்போது ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன். அதாவது ஜூன் 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காத பட்சத்தில் ஜூலை 1 முதல் இணைக்காத பான் கார்டுகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இதன் பின்னர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்றால் ரூ.1000 கட்டணத்துடன் தான் இணைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் இல்லாத ஒரே காரணம்; டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண் - படிப்பை தொடர முடியாத அவலம்
தற்போது பான் கார்டு பயன்படுத்தும் பலரும் தங்களது பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டோமா? இல்லையா? என்ற சந்தேகத்தில் இருந்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் வருமான வரித்தளத்திற்குச் சென்று Profile Settingsஐ கிளிக் செய்து Pfofile settingsல் Link aadhaar என்பதை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்கள் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது என்று வரும். இதன் மூலம் பயனாளிகள் தங்கள் நிலையை அறிந்து கொள்ளலாம்.