Namibian Cheetah : நமீபியா டூ இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி மரணம் - என்ன காரணம் தெரியுமா?

By Raghupati RFirst Published Mar 28, 2023, 8:52 AM IST
Highlights

குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட நமீபியா பெண் சிவிங்கிப்புலி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் இருந்து 8 சீட்டா வகை சிறுத்தைகள் சரக்கு விமானத்தின் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர் கொண்டு வரப்பட்டது. 

இந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி கடந்த ஆண்டு நடைபெற்ற தனது பிறந்தநாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக 5 பெண் சீட்டாக்கள், 3 ஆண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டன. தனது பிறந்தநாளில் நமீபியாவில் இருந்து வந்த இந்த சிவிங்கிப் புலிகளை தேசிய பூங்கா வனத்தில் திறந்து விட்டார் பிரதமர் மோடி.

8 சிவிங்கி புலிகளுள் ஒன்றான பெண் சிவிங்கிப் புலியான ஷாஷா நேற்று இறந்தது. அந்த சிவிங்கி புலிக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை காரணமாக இறந்ததாக  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. நான்கரை வயதுக்கு மேற்பட்ட சிவிங்கி புலியின் மரணம், ப்ராஜெக்ட் சீட்டாவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

நமீபியாவில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பே அவர் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்ததால் ஷாஷா உயிரிழந்தது  என்று முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (பிசிசிஎஃப்-வனவிலங்கு) ஜே.எஸ்.சௌஹான் பிடிஐயிடம் தெரிவித்தார். இதுபற்றி பேசிய அவர், “கடந்த மார்ச் 22 அன்று ஒரு கண்காணிப்புக் குழு ஷாஷா சோர்வாக இருந்ததை கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

இதையும் படிங்க..அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கி சூடு.. குழந்தைகள் உட்பட 6 பேர் பலி - பெண்ணை சுட்டுக்கொன்ற காவல்துறை

அன்றைய தினம் வனவிலங்குகளின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஷாஷாவின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது”  என்று சவுகான் கூறினார். நிலப்பரப்பில் அதி வேகம் ஓடக் கூடிய திறன் பெற்ற சிவிங்கிப் புலிகள் ஒருகாலத்தில் இந்தியாவில் அதிகமாக இருந்தது என்றும், அது ஆங்கிலேயர் காலத்தில் அதிகளவில் வேட்டையாடப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த வகை சிறுத்தையானது 1947 இல் இன்றைய சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் இறந்தது. 1952 இல் நாட்டில் மிக வேகமாக நில விலங்குகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட பெண் சிவிங்கிப்புலி உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் கவலையை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க..Gold Rate Today : மீண்டும் குறைந்த தங்க விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி - எவ்வளவு தெரியுமா?

இதையும் படிங்க..வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்

click me!