ராகுல் காந்தியை அந்தமான் சிறையில் தள்ள வேண்டுமாம்! ஏக்நாத் ஷிண்டே சீற்றம்

By SG BalanFirst Published Mar 27, 2023, 10:27 PM IST
Highlights

மன்னிப்பு கேட்பதற்கு தன் பெயர் சாவர்கர் அல்ல என்று பேசியதற்காக ராகுல் காந்தியை அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே சொல்கிறார்.

தான் சாவர்க்கர் இல்லை என்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து, மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரேவுக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி 'மோடி' என்ற பெயர் பற்றி பேசியது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) இழிவுபடுத்துவதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மார்ச் 22ஆம் தேதி சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து, மார்ச் 23ஆம் தேதி மக்களவை செயலகம் அவரை எம்.பி.யில் இருந்து தகுதிநீக்கம் செய்தது.

2 மாத குழந்தையைக் கொன்ற சிறுமிகள்! பொம்மை போல நினைத்து விளையாடியதால் நேர்ந்த விபரீதம்!

தகுதிநீக்க நடவடிக்கைக்குப் பின் சனிக்கிழமை ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எனது அடுத்த பேச்சுக்கு பிரதமர் பயந்ததால்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். அவரது கண்களில் பயத்தைக் காண்கிறேன். அதனால்தான் நான் நாடாளுமன்றத்தில் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை" என்றார். பாஜக ராகுல் காந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என்று சொல்வது பற்றி பதிலளித்த அவர், "என் பெயர் சாவர்க்கர் அல்ல, காந்தி. மன்னிப்பு கேட்கமாட்டேன்" எனத் தெரிவித்தார்.

இந்துத்துவர்களால் முக்கியத் தலைவராகக் கருதப்படும் சாவர்கர் பிரிட்டிஷ் இந்தியாவில் அப்போதை ஆங்கிலேயே அரசு ஆட்சியில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆங்கிலேய அரசுக்கு கருணை மனுக்களை அனுப்பிய, அதன் மூலம் சிறையிலிருந்து விடுதலை பெற்றார். சிவசேனா கட்சி தொடக்க காலம் முதல் உறுதியான இந்துத்துவ நிலைப்பாட்டுடன் இருக்கும் கட்சி என்பதால், அக்கட்சியினரை ராகுல் காந்தியின் பேச்சு சீண்டியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷெண்டே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ராகுல் காந்தி சாவர்கர் பற்றி பேசிய குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "ராகுல் காந்தியின் பேச்சால் மகாராஷ்டிர மக்கள் கொதிப்படைந்துள்ளனர். சாவர்க்கரின் தியாகத்தை தெரிவிக்க மாநிலம் முழுவதும் சாவர்க்கர் கவுரவ் யாத்திரை நடத்துவோம். ராகுல் காந்தி முடிந்தால் அந்தமான் சிறையில் ஒருநாள் தங்கிப் பார்க்கட்டும்" என ஷிண்டே கூறினார்.

லஞ்ச ஊழல் வழக்கில் கர்நாடக பாஜக எம்எல்ஏ விருபாக்‌ஷப்பா கைது

"சாவர்க்கர் மகாராஷ்டிராவுக்கு மட்டும் கடவுள் அல்ல, முழு நாட்டிற்கும் கடவுள்" எனவும் ஷிண்டே சொல்லிக்கொண்டார். உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) கைகோர்த்து சிவசேனாவின் அடிப்படைக் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்ததுவிட்டார் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

"மகாராஷ்டிரா சட்டசபை கூட்டத்தொடரின்போது இந்துத்துவா பற்றி தொடர்ந்து பேசுபவர்கள் ராகுல் காந்தியை பற்றி எதுவும் கூறவில்லை. அவர்கள் கருப்பு ரிப்பன் அணிந்து, காங்கிரஸ் தலைவர்களுடன் நின்று ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை எதிர்த்தனர். ஒட்டுமொத்த மாநிலமும் இதை பார்த்திருக்கிறது" எனவும் தெரிவித்துள்ளார்.

உத்தரவ் தாக்கரேவும் ராகுல் காந்தியின் பேச்சைக் கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி மாநில காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த விருந்திலும் அவர் பங்கேற்கவில்லை. ஆனால், சிவசேனா தரப்பில் கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்து வேறுபாட்டைக் காட்டிக்கொள்ள கருப்பு ரிப்பன் அணிந்து சென்றனர்.

ஓபிஎஸ் கதி என்ன ஆகும்? அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்

click me!