அகிலேஷ் சஸ்பெண்ட் ரத்து - சரண்டரான முலாயம் உபி அரசியலில் திடீர் திருப்பம்

First Published Dec 31, 2016, 3:47 PM IST
Highlights


உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அவரின் சித்தப்பா ராம்கோபால் யாதவ் ஆகிய இருவரும் நீக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மீண்டும் சமாஜ்வாதிக் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அகிலேஷ் பவர் தெரிந்ததால் முலாயம் பல்டி அடித்துள்ளார்.


உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்லுக்காக முதல் கட்டமாக  325 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாடி கட்சி இரு நாட்களுக்கு முன் வெளியிட்டது.


கட்சி தலைவர் முலாயம்சிங் வெளியிட்ட பட்டியலில், முதல்வர் அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் பலருக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை. அதே சமயத்தில், முலாயம் சிங்கின் தம்பி சிவபால் சிங் யாதவ் ஆதரவாளர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.


வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்ய அகிலேஷ் கூறியும் அதற்கு தலைவர் முலாயம்சிங் மறுத்துவிட்டார். இதனால்,  தனது ஆதரவு வேட்பாளர்கள் பட்டியலை அகிலேஷ் யாதவ் நேற்றுமுன்தினம் வெளியிட்டு பதிலடி கொடுத்தார். 


கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட அகிலேஷ்யாதவையும், அவரின் சித்தப்பா  ராம்கோபால் யாதவையும் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்து கட்சித்தலைவர் முலாயம்சிங் நேற்று உத்தரவிட்டார்.


இதை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் தனது வீட்டில் எம்.எல்.ஏ.க்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். மொத்தம் உள்ள 229 சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க் களில் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 இந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று முலாயம்சிங் யாதவ் தடைவிதித்து இருந்தும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். இதனால் கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்தது.


இந்த கூட்டம் முடிந்த பின், முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது தந்தை முலாயம்சிங்கை சந்தித்தார். . இந்த சந்திப்பை தொடர்ந்து இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் -ராம் கோபால் யாதவ் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.


இது குறித்து டுவிட்டரில் முலாயம்சங்கின் தம்பி சிவபால்சிங் வெளியிட்ட செய்தியில், “ அகிலேஷ், ராம்கோபால் சிங் யாதவ் நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க தலைவர் முலாயம்சிங் உத்தரவிட்டுள்ளார். அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலைச்சந்திப்போம். வகுப்புவாதசக்திகளை தேர்தலில் முறியடிப்போம்'' எனத் தெரிவித்துள்ளார். 
 

click me!