மாலத்தீவும் இல்ல.. துபாயும் இல்ல.. இப்ப எல்லாருடைய கவனமும் லட்சத்தீவு மேல தான்.. என்ன காரணம்?

Published : Jan 08, 2024, 11:23 AM IST
மாலத்தீவும் இல்ல.. துபாயும் இல்ல.. இப்ப எல்லாருடைய கவனமும் லட்சத்தீவு மேல தான்.. என்ன காரணம்?

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால் துபாய், மாலத்தீவுகளை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் லட்சத்தீவு ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால் துபாய், மாலத்தீவுகளை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் லட்சத்தீவு ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திரைப்பிரபலங்கள், பெரும்பணக்கார தொழிலதிபர்கள் புத்தாண்டு, பண்டிகைகள், பிறந்த நாள், திருமண் நாள் விழா போன்ற சிறப்பு நிகழ்வுகளை உலகின் பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் பல பிரபலங்களில் முதல் தேர்வாக இருந்து வந்தது. இந்திய பிரபலங்கள் மட்டுமினிறி ஹாலிவுட் வில் ஸ்மித், ஜேசன் ஸ்டேதம் உள்ளிட்ட பலரும் துபாய்க்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே போல் பாலிவுட் பிரபலங்களும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களூம் அடிக்கடி துபாய் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் துபாயில் திருட்டு, வழிபறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால் உலக பிரபலங்கள் பாதுகாப்பு கருதி துபாய் செல்வதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஹாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்களின் ஃபேவரைட் இடமாக மாலத்தீவு மாறி உள்ளது.

 

பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகள்.. மாலத்தீவின் அனைத்து விமான முன்பதிவுகளையும் சஸ்பெண்ட் செய்த EaseMyTrip..

கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்கள் தங்கள் விடுமுறையை மாலத்தீவுக்கு சென்று கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த நடிகர் நடிகைகள் மாலத்தீவு சுற்றுலா சென்று புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் மாலத்தீவு உலகின் பிரபலமான சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் தான் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவுக்கு அரச முறை பயனம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர் லட்சத்தீவின் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை மற்றும் அங்கு சாகச பொழுதுபோக்கு செய்த புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் உலகம் முழுவதும் உள்ள பிரபல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மோடியின் வீடியோ, புகைப்படங்களை லைக் செய்துள்ளனர். கடந்த 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் லட்சத்தீவு முதலிடம் பிடித்துள்ளது.

இதனிடையே பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த இழிவான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மாலத்தீவை தவிர்க்க வேண்டும் என்று பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் #BoycottMaldives என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாது. இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்ய தொடங்கி உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடியை கேலி செய்த அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்த மாலத்தீவு அரசு

இதனால் லட்சத்தீவின் மீதான கவனம் அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் துபாய், மாலத்தீவு, கோவா கடற்கரைகளை பின்னுக்கு தள்ளி கேரளா அருகே உள்ள லட்சத்தீவு ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!