ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த மர்ம நபர் உபியில் கைது.. தீவிரவாத செயலா? பரபர பின்னணி

By Raghupati R  |  First Published Apr 4, 2023, 2:53 PM IST

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கேரள மாநிலத்தில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணி அளவில் கோழிக்கோடு மாவட்டம், எலத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றது. 

அப்போது ரயிலின் டி1 பெட்டியில் பயணம் செய்த மர்ம நபர் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை பயணிகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளான். அப்போது பெட்ரோல் பட்டு பயணிகள் சிலருடைய ஆடையிலும் தீப்பிடித்துள்ளது. அதை பார்த்த மற்ற பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர். அந்த மர்ம நபர் வெளியில் குதித்து தப்பியோடினான் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

அதற்குள் தீயை பயணிகளே அணைத்துவிட்டு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரயில்வே போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்தனர். அப்போது, தண்டவாளத்தில் கிடந்த ஒரு பையைக் கைப்பற்றினர். அதில் இன்னொரு பெட்ரோல் பாட்டில் மற்றும் 2 மொபைல் போன்கள் இருந்துள்ளன. அந்த பை தப்பியோடிய மர்ம நபருடையதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு இல்லாத போனையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த மார்ச் 31ம் தேதி போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளரின் விவரங்களை அறிய முயன்றுள்ளனர். தீ விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

இதுகுறித்து முதல்வர் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், மாநில காவல்துறைத் தலைவர் அனில் காந்த் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலம் வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ரயில்வே அமைச்சகத்திடம் கோரப்படும் என்றும் முதல்வர் கூறினார். அந்த நபரின் உருவ படம் வெளியிடப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த ஷாருக் சைபி என்ற அந்நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண்.. ஊக்கப்படுத்திய தமிழக அரசு !!

click me!