AAP: kejriwal: bjp: ‘என் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவிடம் ரூ.800 கோடி எப்படி வந்தது?’ கெஜ்ரிவால் கேள்வி

By Pothy RajFirst Published Aug 25, 2022, 3:18 PM IST
Highlights

என் ஆட்சியைக் கவிழ்க்க, ஒரு எம்எல்ஏக்கு ரூ.20 கோடிவீதம், ரூ.800 கோடி வழங்குவதற்கு பாஜகவிடம் பணம் எங்கிருந்து வந்தது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

என் ஆட்சியைக் கவிழ்க்க, ஒரு எம்எல்ஏக்கு ரூ.20 கோடிவீதம், ரூ.800 கோடி வழங்குவதற்கு பாஜகவிடம் பணம் எங்கிருந்து வந்தது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களிடம் பாஜக தலைவர்கள் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. எம்எல்ஏ தலா ஒருவருக்கு ரூ.20 கோடி தருவதாகவும், கூடுதலாக எம்எல்ஏக்களை இழுத்துவந்தால் ரூ.25 தருவதாகவும் பாஜக பேரம் பேசியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. அதுமட்டுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிஷோடியாவுக்கு முதல்வர் பதவியும் தருவதாக ஆசைவார்த்தை கூறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

பெகாசஸ் வழக்கு: மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை:விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தில் தகவல்

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அரசியல் குழுக் கூட்டத்துக்கு டெல்லியில் அந்தக் கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்துக்குப்பின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் எங்களிடம் தோல்வி அடைந்துவிட்டது. எங்கள்கட்சி எம்எல்ஏ ஒவ்வொருவருக்கும் ரூ.20 கோடி பேரம் பேசியது பாஜக. எங்கள் கட்சியில் 40 எம்எல்ஏக்களை இழுக்க பாஜகவுக்கு ரூ.800 கோடி தேவை. அப்போதுதான் டெல்லி அரசைக் கவிழ்க்க முடியும். 

ஆனால், இந்த தேசத்து மக்கள் பாஜகவுக்கு  ரூ.800 கோடி எவ்வாறு வந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜிஎஸ்டியில் இருந்து வந்ததா அல்லது  பிஎம் கேர்ஸ் நிதியா என்பதைக் கூற வேண்டும். அல்லது யாரேனும் நண்பர்கள் மூலம் இந்த நிதி கிடைத்ததா. 

ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் மிஸ்ஸிங்; அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்; பாஜகவின் கை வரிசையா?

சிபிஐ அமைப்பால் விசாரிக்கப்பட்டு வரும் மணிஷ் சிஷோடியா மீது பொய்யான முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிஷோடியா இல்லத்தில் சுவர் முதல் மெத்தைவரை சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சிபிஐ அமைப்பால் எந்தவிதமான பணத்தையும், கணக்கில் வராத சொத்துக்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

எந்த விதமான சட்டவிரோத ஆவணங்கள் நகைகள், ஏதும் இல்லை. சிஷோடியா எவ்வளவு நேர்மையானவர், தேசப்பற்று மிக்கவர், தலைநகரில் குழந்தைகளின் கல்விக்காக எவ்வளவு உழைக்கிறார் என்பது தெரிந்தும் ஏன் அவருக்கு இப்படி நடக்கிறது என்று நாங்கள் சிந்திக்கிறோம். 

சிபிஐ ரெய்டு முடிந்தபின், துணை முதல்வர் சிஷோடியாவிடம் முதல்வர் பதவி தருகிறோம், கெஜ்ரிவாலைவிட்டு விலகிவிடுங்கள், சில எம்எல்ஏக்களுடன் வந்து எங்களுடன் சேருங்கள் என்று ஆசை வார்த்தை கூறியது பாஜக. 

cji : nv ramana:தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளை ஓய்வு: உச்ச நீதிமன்றத்தில் 5 முக்கிய வழக்குகள் விசாரணை

டெல்லி அரசை கவிழ்ப்போம், சிபிஐ, அமலாக்கப்பிரிவை உங்களுக்கு எதிராக அனுப்புவோம் என்று அவரை பாஜக மிரட்டியுள்ளது. நான் முற்பிறவியில் புண்ணியம் செய்திருப்பதால்தான் சிஷோடியா போன்ற நல்ல மனிதர்கள் என்னிடம் இருக்கிறார்கள். பாஜகவினர் முதல்வர் தருவதாகக் கூறியும் சிஷோடியா மறுத்துவிட்டார். 

எந்த எம்எல்ஏவும் பாஜகவின் ஆசை வார்த்தைக்கு மயங்கவில்லை நெருக்கடிக்கு அச்சப்படவில்லை என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  அவர்களுக்கு 40 எம்எல்ஏக்கள் தேவை. மக்கள் நேர்மையான ஆட்சிக்காக எங்களை அமர்த்தியுள்ளார்கள். நானோ அல்லது எங்கள் கட்சி எம்எல்ஏக்களோ தேசத்துக்கும், துரோகம் செய்து விலைபோகமாட்டோம். 

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்

click me!