கர்நாடகாவில் போலிச் செய்திகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான மாநில அளவிலான தனிப்பிரிவு அமைப்பதற்கு முதல்வர் சித்தராமையா திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் போலிச் செய்திகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான மாநில அளவிலான தனிப்பிரிவு அமைப்பதற்கு முதல்வர் சித்தராமையா திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தனிப்பிரிவு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேயின் கீழ் செயல்பட உள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில், சமூகத்தில் ஒரு தரப்பினரை தனிமைப்படுத்தப்படுவதற்கு போலி செய்திகள் தான் ஒரு முக்கிய காரணம் என்றும் வலியுறுத்தியுள்ளார். அவை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறிய சித்தராமையா, போலி செய்திகளை தடுக்கும் வகையில் விதிமுறைகளை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
undefined
போலிச் செய்திகளைப் பரப்பும் நபர்களை அடையாளம் காண்பது, போலிச் செய்திகளைப் பரப்புவதைத் தடுப்பது, அத்தகைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்குவது உள்ளிட்ட மூன்று நிலைகளில் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் சித்தராமையா கூறியுள்ளார்.
நெருப்புடா... நெருங்குடா பாப்போம்! பயிற்சி முடிந்து ராணுவப் படைகளில் இணையும் 19,000 அக்னி வீரர்கள்!
உண்மைச் சரிபார்ப்பு பிரிவில் மேற்பார்வைக் குழு, ஒருங்கிணைப்பு அதிகாரிகள், உண்மையைக் கண்டறியும் குழு மற்றும் திறன் மேம்பாட்டுக் குழு ஆகியவை இடம்பெற உள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போலிச் செய்திகளை கண்டறிய பயன்படுத்துவது பற்றி அமைச்சர் பிரியங்க் கார்கே சுட்டிக்காட்டினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு போலிச் செய்திகளைக் கண்டறிவது முக்கியம் என்று கருத்து தெரிவித்த அவர், போலி செய்தி தொடர்பான வழக்குகளில் உள்துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாலும், தகவல் தொழில்நுட்பத் துறை அதற்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதியளித்தார்.
சாமானியர்களும் பொய்யான செய்திகளைப் பரப்புவது குற்றம் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா வலியுறுத்தியுள்ளார்.
உண்மை சரிபார்க்கும் பிரிவின் கீழ், செய்திகளின் உண்மைத் தன்மையைப் பரிசோதிக்கும் சரிபார்ப்பாளர்களை நியமிக்க உள்ளதாக கர்நாடக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "ஆழ்ந்த அனுபவம் கொண்ட உண்மை சரிபார்ப்பாளர்கள் (Fact Checkers) இந்தப் பிரிவில் இருப்பார்கள். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்தி சமூக வலைத்தளப் பதிவுகள் கண்காணிக்கப்படும்" என்று அரசு வட்டாரத்துக்கு நெருக்காமன ஒருவர் சொல்கிறார்.
"அவர்கள் ஒரு சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், சமூக வலைத்தள நிறுவனத்துக்கு உள்துறை தகவல் அனுப்பப்படும். தீங்கு விளைவிக்காத போலிச் செய்திகள் இருந்தால், அது அகற்றப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும். போலிச் செய்தி தீங்கு விளைவிப்பதாக இருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் கூறுகிறார்.