Published : May 13, 2023, 12:03 AM ISTUpdated : May 13, 2023, 11:45 PM IST

Karnataka Election Result 2023 Live: கர்நாடக முதலமைச்சர் யார்.?

சுருக்கம்

கர்நாடக முதலமைச்சர் யார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.  இந்த நிலையில் நாளை நடக்க இருக்கிறது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.

Karnataka Election Result 2023 Live: கர்நாடக முதலமைச்சர் யார்.?

11:45 PM (IST) May 13

கர்நாடகாவில் நடந்தது.. வட மாநிலங்களிலும் நடக்கும் - கர்நாடக தேர்தல் குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கருத்து

கர்நாடகாவில்  ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு வட மாநிலங்களிலும் அடுத்தடுத்து ஏற்படும் என்று கூறியுள்ளார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

09:40 PM (IST) May 13

கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்

காங்கிரஸ் உள்ளூர் தலைமையிலான கட்சியின் பிரச்சாரம், ஊழல், உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் 5 வாக்குறுதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தெளிவாக வெற்றி பெற்றது.

மேலும் படிக்க

08:09 PM (IST) May 13

அன்று ஜூனியர் வழக்கறிஞர்.. இன்று முதல்வர் வேட்பாளர் - யார் இந்த சித்தராமையா?

நடந்து முடிந்துள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தி ஆட்சி அமைக்க உள்ளது. அடுத்த முதல்வர் யார் என்ற பட்டியலில் சித்தராமையா பெயரும் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க

06:37 PM (IST) May 13

“முரட்டுத்தனமான சர்வாதிகார அரசியல் ஒழிந்தது” பாஜகவின் தேர்தல் தோல்வி குறித்து மம்தா பானர்ஜி ட்வீட்

கர்நாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்தது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க 

 

06:20 PM (IST) May 13

கர்நாடக தேர்தலில் மண்ணை கவ்விய 14 அமைச்சர்கள்.. இப்படியொரு நிலைமையா.! பரிதாபத்தில் பாஜக

கர்நாடக தேர்தலில் முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட 11 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற 14 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

05:56 PM (IST) May 13

பிரதமர் மோடி வாழ்த்து!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! 

 

 

05:19 PM (IST) May 13

காந்திஜியை போல நீங்களும்.. அன்பால் கிடைத்த வெற்றி! ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன நடிகர் கமல் ஹாசன்

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ராகுல்காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க

04:40 PM (IST) May 13

12 ஹெலிகாப்டரில் தமிழகத்துக்கு வரும் கர்நாடக காங்கிரஸ் வெற்றி MLAக்கள் - மீண்டும் கூவத்தூர் பார்முலா

காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகுத்து வருகிறது . ஆளும் பாஜக 65 இடங்களிலும்,  மதசார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க

03:29 PM (IST) May 13

ஏழைகளின் சக்தி தோற்கடித்துள்ளது: ராகுல் காந்தி!!

பாஜகவின் முதலாளித்துவ நண்பர்களின் சக்தியை ஏழைகளின் சக்தி தோற்கடித்துள்ளது என்று கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றியை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

03:12 PM (IST) May 13

திராவிட நிலப்பரப்பில் பாஜக அகற்றம்: முக ஸ்டாலின் ட்வீட்!!

03:08 PM (IST) May 13

மகத்தான தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸுக்கு மகத்தான தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றி என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார் "மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிலைநாட்டுவோம். எங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்துவோம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு நன்றி" என்று கார்கே கூறினார்.

03:06 PM (IST) May 13

காந்தி நகர் தொகுதியில் தினேஷ் குண்டுராவ் வெற்றி

காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான தினேஷ் குண்டுடாவ் வெற்றி பெற்றுள்ளார். காந்தி நகர் தொகுதி தமிழர்கள் அதிகம வாழும் பகுதி என்பது குறிப்பிட்டத்தக்கது.

02:51 PM (IST) May 13

ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது: ராகுல் காந்தி

"கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. கர்நாடக மக்களுக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட கட்சித் தலைவர்களுக்கு நன்றி" என்று ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார்.

02:47 PM (IST) May 13

ஹூப்ளி தார்வாட் சென்ட்ரல் தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி

ஹூப்ளி தார்வாட் சென்ட்ரல் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட முன்னாள் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியைத் தழுவியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மகேஷ் டெங்கினகை வெற்றி பெற்றிருக்கிறார்.

02:12 PM (IST) May 13

மக்கள் கொடுத்த தீர்ப்பே ஏற்கிறோம்: எடியூரப்பா

"கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. பாஜகவுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். கடந்த 4 மாதங்களாக ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறேன்" என பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூறி இருக்கிறார்.

02:11 PM (IST) May 13

ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி முகம்

ஹூப்ளி தார்வாட் சென்ட்ரல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி முகத்தை எதிர்கொண்டிருக்கிறார்.

02:05 PM (IST) May 13

தினேஷ் குண்டுராவ் முன்னிலை

தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகிக்கிறார்.

01:56 PM (IST) May 13

தோல்வியை ஒப்புக்கொண்டது

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது - பாஜக

''வெற்றிக்கான இடங்களை எங்களால் பெற முடியவில்லை, முடிவுகள் முழுவதுமாக வந்ததும், எங்கே வெற்றிவாய்ப்பை தவறவிட்டோம் என அலசுவோம்'' பசவராஜ் பொம்மை!

01:52 PM (IST) May 13

கொரட்டகரே தொகுதியில் ஜி. பரமேஷ்வரா 56,077 வாக்குகள் பெற்று முன்னிலை

கொரட்டகரே தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஜி. பரமேஷ்வரா 56,077 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். ஜனதா தளம் கட்சியின் பி. ஆர். சுதாகர் லால் 43,637 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

01:49 PM (IST) May 13

கர்நாடக பாஜக அலுவலகத்தில் நுழைந்த பாம்பு.. பீதியடைந்த தொண்டர்கள்.. வைரல் வீடியோ.

 முதல்வர் பசவரக் பொம்மை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்குச் சென்றபோது ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. பா.ஜ.க., அலுவலக வளாகத்தில் பசவராஜ் பொம்மை வந்தபோது பாம்பு ஒன்று நுழைந்தது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள்

01:48 PM (IST) May 13

Karnataka Assembly Election 2023: தெளிவான தீர்ப்பு கொடுத்த கர்நாடக மக்கள்; பாஜக எங்கே சறுக்கியது?

கருத்துக்கணிப்புகள் பல தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் என்று கூறியிருந்த நிலையில், அவற்றைப் பொய்யாக்கிய கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தெளிவான தீர்ப்பைக் கொடுத்துள்ளனர்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள்

01:47 PM (IST) May 13

மோடி, அமித்ஷா கர்நாடகாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. சித்தராமையா பேட்டி

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கர்நாடகாவில் எத்தனை முறை பேரணி நடத்தினாலும், அது மாநிலத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள்

01:28 PM (IST) May 13

வெறுப்பு அரசியலைப் புறந்தள்ளிய வாக்காளர்கள்: சித்தராமையா

"கர்நாடக வாக்காளர்கள் பண்பட்டவர்கள். அவர்கள் வெறுப்பு அரசியலைப் புறந்தள்ளி இருக்கிறார்கள்." என்று சித்தராமையா கூறியுள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், மாநிலத்திற்கு வந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, சோனியா காந்தி, கட்சியின் மாநிலத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

01:22 PM (IST) May 13

டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர் மல்க பேட்டி

"கர்நாடகத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி;

காங். மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, சித்தராமையா உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் நன்றி"

- கர்நாடகா காங். தலைவர் டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர் மல்க பேட்டி


 

01:22 PM (IST) May 13

கர்நாடகாவில் பாஜக தோல்விக்குக் காரணம் என்ன?

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகள் பல தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் என்று கூறியிருந்த நிலையில், கணிப்புகளைப் பொய்யாக்கிய கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தெளிவான தீர்ப்பைக் கொடுத்துள்ளனர். பாஜகவுக்கு நந்தினி பால் விவகாரம், முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சனை, ஹிஜாப் விவகாரம், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை பின்னடைவை அளித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க...

Karnataka Assembly Election 2023: தெளிவான தீர்ப்பு கொடுத்த கர்நாடக மக்கள்; பாஜக எங்கே சறுக்கியது?

01:20 PM (IST) May 13

காங்கிரஸ் வாக்கு சதவீதம் அதிகரிப்பு!

1 மணி நிலவரப்படி, கடந்தாண்டு வாக்கு சதவீதத்தை விட காங்கிரஸ் இந்த ஆண்டு 4% அதிகம் பெற்றுள்ளது.


 

01:19 PM (IST) May 13

மக்களுக்கு பங்களிப்போம்: ராஜீவ் சந்திரசேகர்!!

தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கிறோம். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக நமது மாநிலத்திற்கும், மக்களுக்கும் பங்களிப்போம் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

01:10 PM (IST) May 13

கங்காவதி தொகுதியில் ஜனார்த்தன ரெட்டி வெற்றி

பாஜகவில் வாய்ப்பு வழங்கப்படாததால் தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்ட ஜனார்த்தன ரெட்டி கங்காவதி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

01:05 PM (IST) May 13

காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்த கூறியுள்ளார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா ஆகியோரை தொலைபேசயில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.

12:53 PM (IST) May 13

பிரதமர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்: பூபேஷ் பாகல்

கர்நாடக தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்தது போலவே உள்ளது. தன்னை முன்னிலையில் வைத்து பிரதமர் வாக்குகளை கேட்டார். ஆக, இது மோடியின் தோல்வி என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

12:53 PM (IST) May 13

ஆய்வு செய்வோம்:முதல்வர் பசவராஜ் பொம்மை!!

எங்களால் வெற்றியை எட்ட முடியவில்லை. முடிவுகள் வந்தவுடன் விரிவான பகுப்பாய்வு செய்வோம். தேசியக் கட்சி என்ற வகையில், பல்வேறு நிலைகளில் எத்தகைய குறைபாடுகள், இடைவெளிகள் ஏற்பட்டன என்பது பற்றி அலசுவோம். இந்த முடிவை நாங்கள் எங்கள் முன்னேற்றத்திற்கான முடிவாக எடுத்துக் கொள்கிறோம். பிரதமர் மற்றும் பாஜக தொண்டர்கள் முயற்சித்தும் வெற்றி பெற முடியவில்லை என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 
 

12:52 PM (IST) May 13

கனகபுராவில் டிகே சிவகுமார் வெற்றி!!

டிகே சிவகுமார் கனகபுராவில் வெற்றி பெற்றார். சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் அசோக் தோல்வி அடைந்தார்.

12:38 PM (IST) May 13

அறுதிப்பெரும்பான்மையை நோக்கி நகரும் காங்கிரஸ்

காங்கிரஸ் 127

பாஜக 70

ஜேடிஎஸ் 21

மற்றவை 6

ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற 113 தொகுதிகள் தேவை

12:24 PM (IST) May 13

எத்தனை முறை வந்தாலும் நடக்காது: சித்தராமையா பளிச்!!

நரேந்திர மோடியோ, அமித் ஷாவோ, ஜே.பி. நட்டாவோ எத்தனை முறை வேண்டுமானாலும் மாநிலத்திற்கு வரட்டும் (ஆனால்) கர்நாடக வாக்காளர்களிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனெனில் மக்கள் பாஜகவின் ஊழல், தவறான நிர்வாகம், மக்கள் விரோத அரசியல் ஆகியவற்றைப் பார்த்து விரக்தி அடைந்துள்ளனர் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

12:14 PM (IST) May 13

பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

ஷிக்கான் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் யாசிர் அகமது கான் பதான் போட்டியிட்டார். பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் ஷிக்கான் தொகுதியில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.

​​​​

12:10 PM (IST) May 13

கனகபுராவில் 70 சதவீதம் வாக்குகளைக் கடந்தார் டி.கே. சிவகுமார்

கனகபுரா தொகுதியில் போட்டியிடும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முதல்வராக வாய்ப்புள்ளவருமான டி.கே. சிவகுமார் 56,309 வாக்குகள் பெற்று வலுமான முன்னிலையுடன் இருக்கிறார். 72% வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன. பாஜக வேட்பாளர் ஆர். அசோகா 9091 வாக்குகள் (11.62%) பெற்றிருக்கிறார்.

12:02 PM (IST) May 13

பின்னடவை சந்தித்த பாஜக.. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்.. நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம்

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கர்நாடக தேர்தல் செய்திகள்...

12:00 PM (IST) May 13

வருணாவில் சித்தராமையா ஆதிக்கம்

கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா வருணா தொகுதியில் 24,895 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து களத்தில் உள்ள பாஜக வேட்பாளர் வி. சோமண்ணாவுக்கு 16,541 ஒட்டுகள் கிடைத்துள்ளன.

11:57 AM (IST) May 13

50 ஆயிரம் வாக்குகளைத் தாண்டிய லட்சுமண் சவடி

அத்தானி தொகுதியில் லட்சுமண் சவடி 50,275 வாக்குகள் பெற்று முன்னிலை. இரண்டாவது இடத்தில் உள்ள பாஜகவின் மகேஷ் குமதள்ளி 19,766 வாக்குகள் பெற்றுள்ளார். இதுவரை சுமார் 70 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ள லட்சுமண் சுவடி தனது வெற்றியைக் கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறார்.

லட்சுமண் சவடி பாஜகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய முக்கியத் தலைவர்களில் ஒருவர். லிங்காயத் சமுகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள தொகுதி இந்தத் தொகுதியில் அதிக செல்வாக்கும் கொண்டவர்.

11:49 AM (IST) May 13

பெங்களூருவில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பெருபான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி தனி பெருபான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.  இதனால், பெங்களூருவில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 


More Trending News