indian air force day:இந்திய விமானப்படையின் மைல்கல் ‘பிரசாந்த் ஹெலிகாப்டர்’: மேக் இன் இந்தியாவின் அம்சம்

By Pothy Raj  |  First Published Oct 8, 2022, 9:20 AM IST

பிரசாந்த் என்றால் ஆக்ரோஷம், ஆவேசம், தீவிரம் என்று பொருள். அந்த பெயர் கொண்ட தாக்குதல் இலகுரக ஹெலிகாப்டர் கடந்த திங்கள்கிழமை இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டது.


பிரசாந்த் என்றால் ஆக்ரோஷம், ஆவேசம், தீவிரம் என்று பொருள். அந்த பெயர் கொண்ட தாக்குதல் இலகுரக ஹெலிகாப்டர் கடந்த திங்கள்கிழமை இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டது.

இந்திய விமானப்படை தினமான இன்று உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேக் இன் இந்தியாவுக்கு வலுகூட்டக்கூடிய அந்த இலகு ரக “பிரசாந்த் ஹெலிகாப்டர்” குறித்துப் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் நிறுவனம் மற்றும் பாதுகாப்புத்துறை இணைந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமான உழைப்பு, பரிசோதனை ஆகியவற்றின் முயற்சியில் உருவாக்கப்பட்டதுதான் பிரசாந்த் ஹெலிகாப்டர். 

இந்த பிரசாந்த் ஹெலிகாப்டர் உருவாக்கத்தின் கரு கடந்த 1999ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில்தான் ஏற்பட்டது. அதிக உயரமான பகுதிகளில் கண்காணிக்கவும், எதிரிகளைத் தாக்கவும் மீட்புப்பணிக்கும் ஹெலிகாப்டர் தேவை என்ற உணர்வையும், தேவையையும் ஏற்படுத்தியது.

தேவைதான் கண்டுபிடிப்பின் தாய் என்பதால் அதற்கான முயற்சியில் இந்திய பாதுகாப்புத்துறையும், ஹால் நிறுவனமும் இறங்கியது. அந்த முயற்சியின் பலனாகக் கிடைத்ததுதான் பிரசாந்த் ஹெலிகாப்டர். 
உலகிலேயே 16,400 அடி உயரத்தில் லேண்டிங்ஆகவும், உடனடியாக பறக்கவும், தாக்குதல் தொடுக்கவும் உருவாக்கப்பட்ட முதல் ஹெலிகாப்டர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள இமயமலைப்பகுதிகள், சியாச்சின் பனிமலைப்பகுதி ஆகியவற்றில் பாதுகாப்பு பணிகளையும், கண்காணிப்பையும், தேவைப்பட்டால் தாக்குதல் நடத்தவும் பிரசாந்த் ஹெலிகாப்டர் அற்புதமான படைப்பாகும். வானில் பறந்தபடியே இலக்கை நோக்கி சுடுதல், சிறிய ரக ஏவுகணைகளை வீசி எதிரிகளின் இலக்குகளை அழித்தலில் பிரசாந்த் நிகர் எந்த ஹெலிகாப்டரும் இல்லை.

இந்திய பாதுகாப்புத்துறை உற்பத்தியிலும், விமானப்படையிலும் பிரசாந்த் ஹெலிகாப்டர் மிகப்பெரிய மைல்கல் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமையாகக் குறிப்பிட்டார். தரைப்படைக்கும், விமானப்படைக்கும் பிரசாந்த் ஹெலிகாப்டர் நிச்சயம் மிகப்பெரிய வலு சேர்க்கும்.

எப்படி உருவானது பிரசாந்த்

கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரசாந்த் எனப்படும் இலகுரக ஹெலிகாப்டரை உருவாக்கவும், ஆய்வுசெய்யவும் மத்திய அரசு அனுமதியளித்தது. 2013ம் ஆண்டு இந்த பணியில் இந்திய ராணுவமும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் நிறுவனத்துடன் இணைந்தது. முதல்கட்டமாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 4 விதமான இலகுரக ப்ரோட்டோடைப் மாதிரிகளை உருவாக்கியது.

 அதன்பின்புதான் ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டு ஏறக்குறைய 10 ஆண்டுகள் பல்வேறு இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பாக ஜோத்பூர் பாலைவனப்பகுதி,  அடர்ந்த காட்டுப்பகுதி, கடல்பகுதி, சியாச்சின் மலைப்பகுதி, பனிமலைப்பகுதி ஆகியவற்றில் பல்வேறு கட்டங்களாக பிரசாந்த் ஹெலிகாப்டர்  பரிசோதனை நடந்தது

2010ம் ஆண்டு முதல் கட்டமாக முதல் ப்ரோட்டோ டைப் “TD-1”உருவாக்கப்பட்டு மார்ச் 29ம் தேதி ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டது. குறைந்த வேகம், குறைவான உயரத்தில் இயக்கி பரிசோதிக்கப்பட்டது. அதன்பின் 2வது ப்ரோட்டோ டைப் “TD-2” உருவாக்கப்பட்டு அதில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இயக்கிப்பார்க்கப்பட்டது. 

இந்தியத் தயாரிப்பான இலகு ரக தாக்குதல் ‘பிரசந்த்’ ஹெலிகாப்டர் விமானப்படையில் இணைப்பு

2011ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி முதன்முதலாக பிரசாந்த் தனது பரிசோதனையைத் தொடங்கியது. 2014ம் ஆண்டு நவம்பரில் “TD-3” உருவாக்கப்பட்டது, அதன்பின் 4வது ப்ரோட்டோ டைப்பும் உருவாக்கி பல்வேறு பரிசோதனைகள் செய்து மேம்படுத்தப்பட்டது. பரிசோதனையின்போது 4,700 மீட்டர் உயரத்தில் 500 கிலோ எடையைச் சுமந்து பறக்கவைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

பலகட்டப்பரிசோதனைக்குப் பின், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முழுமையாக பரிசோதனையில் ஈடுபடவும் அனைத்து காலநிலையிலும் பரிசோதிக்க அனுமதி தரப்பட்டது. 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலகுரக ஹெலிகாப்டர் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது, இதையடுத்து, 30 ஹெலிகாப்டர்களைத் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது மத்தியஅரசு. 

முதல்கட்டமாக ரூ.3,887 கோடியில் 15 பிரசாந்த் ஹெலிகாப்டர்களை உருவாக்க பாதுகாப்புத்துறைக்கான மத்தியஅமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதில் 10ஹெலிகாப்டர்கள் விமானப்படைக்கும், 5ஹெலிகாப்டர்கள் தரைப்படைக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது. முதல் பிரசாந்த் ஹெலிகாப்டர் கடந்த செப்டம்பர் 29ம்தேதி முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.

ரூ.32,000 வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. விவரம் உள்ளே

பிரசாந்த் ஹெலிகாப்டர் சிறப்பு அம்சங்கள் என்ன

பிரசாந்த் ஹெலிகாப்டரில் சிறப்புவாய்ந்த 2 எஞ்சின்கள் உள்ளன. இரு எஞ்சின்களும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பிரான்ஸின் சப்ரான் நிறுவனமும் இணைந்து உருவாக்கியது. 5.80 டன் எடை கொண்ட இலகுரக ஹெலிகாப்டர் தரையில் இருக்கும் இலக்குகளையும், வானில் பறக்கும் இலக்குகளையும் துல்லியமாக தாக்கிஅழிக்கும் திறன்படைத்தது.

அதிநவீன வழிகாட்டிக் கருவி, ஜிபிஎஸ் கருவி பிரசாந்த் ஹெலிகாப்டரில் உள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 288 கி.மீ வேகத்தில் செல்லும், அதிகபட்சமாக 21 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க முடியும், குறிப்பாக சியாச்சின் மலைப்பகுதிக்கு பிரசாந்த் ஹெலிகாப்டர் ஏற்றது. வானில் பறந்தபடியே 500 கி.மீ சுற்றளவில் வரும் எதிரிகளின் இலக்குகளைக் கண்காணிக்கும் அதிநவீன ரேடார், இன்ப்ரா ரெட் கருவிகள் உள்ளன. 
இரவு நேரத்தில் ரோந்துப்பணி, இரவுநேரத்தில் தாக்குதல் நடத்த எலெக்ட்ரோ ஆப்டிகல் பாட் கருவிகள்,  சிறப்பு ஆயுதங்கள் உள்ளன. பைலட் மற்றும் துணை பைலட் இருவருக்குமே ஆயுதங்களை இயக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 

வானில் பறக்கும்போது, 2கி.மீ சுற்றளவில் நிமிடத்துக்கு 800 குண்டுகளை சுடும் அளவுக்கு ஹெலிகாப்டரின் முன்பகுதியில் அதிநவீன துப்பாக்கி இணைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் கீழ் பகுதியில் 70எம்எம் ராக்கெட், ஏவுணை பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை, ராக்கெட் மூலம் 4.கி.மீ வரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும், 8.கி.மீ வரை தாக்க முடியும். 

வானில் எதிரிகளிடம் இருந்து வரும் இலக்குகளை இடை மறித்து் தாக்கும் தன்மை கொண்ட துருவஸ்திரா மற்றும் மிஸ்ட்ரல்-2 வகை ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் அதிகபட்சமாக 6.5கி.மீ வரை இடைமறித்து தாக்கும் தன்மை கொண்டவை.

வெறும் 25 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்திய விமானப்படை .. உலகில் 4வது வலிமையான படையாக தலைநிமிர்ந்து நிற்கிறது.

இந்திய ராணுவத்துக்கு எப்படி பிரசாந்த் வலு சேர்க்கும்

இந்திய விமானப்படையில் இலகுரக ஹெலிகாப்டரான பிரசாந்த் சேர்க்கப்பட்டது மிகப்பெரிய ஊக்கமாக, அதன் வலிமையை அதிகரிப்பதாக அமையும். இந்திய ராணுவத்துக்கும் பிரசாந்த் ஹெலிகாப்ட்டர் சேர்ப்பு முக்கிய மைல்கல்லாக அமையும்

அதநவீன தொழில்நுட்ப வசதிகள், கருவிகளுடன் பிரசாந்த் ஹெிலிகாப்டர் இருப்பதால், உயரமான மலைப்பகுதிகளில் கண்காணிப்பு, பாதுகாப்பு, எல்லையில் ஊடுருவல் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் தடுக்கவும் முடியும். தேடுதல் பணி, மீட்புப்பணி ஆகியவற்றிலும் பிரந்சந்த் ஹெலிகாப்டர் விரைவாகச் செயல்படும். 24 மணிநேரமும் எந்தக் காலநிலையிலும், எந்தச்சூழலிலும் பறக்கவும் பிரசாந்த் ஹெலிகாப்டரால் முடியும். 

இந்திய ராணுவத்தில் உள்ள ஹெலிகாப்டர் பிரிவான தனுஷ் பிரிவில் 4 பிரசாந்த் ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தனுஷ் பிரிவில் 143 ஹெலிகாப்டர்கள் உள்ளன. அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டருடன் இணைந்து பிரசாந்த் ஹெலிகாப்டரும் நிறுத்தப்படும்.

Tamil News India இந்திய விமானப்படைக்கு புதிய சீருடை… எப்படி இருக்கும்? விவரம் உள்ளே!!

இந்திய விமானப்படையில் தற்போது எம்ஐ-25 மற்றும் எம்ஐ-35 எனும் ரஷ்ய ஹெலிகாப்டர்கள் உள்ளன, இவை படிப்படியாக படையிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து எம்ஐ17ெஸ், எம்ஐ-17வி5எஸ் ஆகிய ஹெலிகாப்டர்களும் படிப்படியாக நீக்கப்படும். இவை தவிர்த்து அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர், அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர், சுமைகளைத் தூக்கும், மீட்புப்பணிக்காக இருக்கும் சினூக் ஹெலிகாப்டர்கள் உள்ளன. 
 

click me!