இந்திய விமானப்படைக்கு புதிய சீருடை… எப்படி இருக்கும்? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Oct 8, 2022, 12:29 AM IST

இந்திய விமானப்படை தினமான இன்று விமானப்படை வீரர்களுக்கான புதிய சீருடை வெளியிடப்பட உள்ளது. 


இந்திய விமானப்படை தினமான இன்று விமானப்படை வீரர்களுக்கான புதிய சீருடை வெளியிடப்பட உள்ளது. இந்திய விமானப்படை வீரர்களுக்கான போர் சீருடையின் புதிய வடிவத்தை விமானப்படை தினத்தன்று விமானப்படைத் தலைவர் வெளியிட உள்ளார். 1932 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையின் துணைப் படையாக இந்திய விமானப்படை (IAF) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டதை விமானப்படை தினம் குறிக்கிறது. 

இதையும் படிங்க: வெறும் 25 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்திய விமானப்படை .. உலகில் 4வது வலிமையான படையாக தலைநிமிர்ந்து நிற்கிறது.

Tap to resize

Latest Videos

ஒவ்வொரு ஆண்டும், இந்திய விமானப்படைத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று விமானப்படை நிலையத்தில் காலையில் அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நிகழ்ச்சியில், விமானப்படை வீரர்களுக்கான புதிய போர் சீருடையை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி வெளியிடுகிறார். 

புதிய சீருடை எப்படி இருக்கும்?

இந்திய விமானப்படையின் புதிய சீருடையில் டிஜிட்டல் கேமோபிளஜ் எனப்படும் உருமறைப்பு உடை மற்றும் வித்தியாசமான துணியுடன் வடிவமைப்பு இருக்கும். இந்த சீருடை தரைப் பணிகளுக்காக விமானப்படையால் பயன்படுத்தப்படும். புதிய சீருடையின் நிறங்கள் மற்றும் நிழல்கள் சற்று வித்தியாசமாக இருக்கும், விமானப்படையின் பணிச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரியில் இந்திய ராணுவம் அறிமுகப்படுத்திய புதிய டிஜிட்டல் பேட்டர்ன் போன்று புதிய சீருடை இருக்கும் என கூறப்படுகிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (என்ஐஎஃப்டி) வடிவமைத்த, புதிய போர் சீருடையில், எடையைக் குறைக்க கேமோபிளஜ் என்னும் உருமறைப்பு வடிவத்திலும் துணியிலும் பல ஸ்மார்ட் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  

click me!