ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைபொருள் பறிமுதல்... 6 பேர் கைது... NCB-யும் இந்திய கடற்படையும் இணைந்து நடவடிக்கை!!

By Narendran SFirst Published Oct 7, 2022, 11:59 PM IST
Highlights

கொச்சி அருகே 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ ஹெராயின் என்ற போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 6 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொச்சி அருகே 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ ஹெராயின் என்ற போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 6 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக துணை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் குமார் சிங், ஆறு ஈரான் நாட்டினரை கைது செய்துள்ளோம். ஹெராயினுடன் படகு மட்டஞ்சேரி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. கைப்பற்றப்பட்ட 200 பாக்கெட்டுகளில் ஒவ்வொன்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பேக்கிங்குகளை கொண்டுள்ளது.

இதையும் படிங்க: மொபைல் & டிவிக்கு தடை போடும் அதிசய கிராமம்.. அடேங்கப்பா.!! கர்நாடகாவில் ஆச்சர்ய சம்பவம்

1,200 கோடி மதிப்பிலான சுமார் 200 கிலோ ஹெராயினுடன் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்று போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகமும் (NCB) இந்திய கடற்படையும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. சில போதைப்பொருள் பாக்கெட்டுகளில் ஸ்கார்பியன் முத்திரையும், மற்றவற்றில் டிராகன் முத்திரையும் இருந்தன. மேலும், நீர் புகாத ஏழு அடுக்கு பேக்கிங்கிலும் போதைப்பொருள் நிரம்பியிருந்தது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடலில் குதித்து தப்பிக்க முயன்றனர்.

இதையும் படிங்க: 2வது முறையாக எருமை மாடுகள் மீது மோதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்.. அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் !

மேலும் சரக்குகளை கடலில் வீச முயன்றனர். அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் ஹெராயின் கடத்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமாக அதிகரித்துள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் மற்றும் பாகிஸ்தானின் மக்ரான் கடற்கரைக்கு ஹெராயின் கடத்துவதற்கான தெற்கு பாதை கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உட்பட இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு முக்கியத்துவம் பெற்றது என்று தெரிவித்தார். 

click me!