வாபஸ் வாங்கு; இல்லையென்றால் போரும் இல்லை அமைதியும் இல்லை என்ற நிலை நீடிக்கும்: சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை!!

Published : Apr 24, 2023, 01:08 PM ISTUpdated : Apr 24, 2023, 01:19 PM IST
வாபஸ் வாங்கு; இல்லையென்றால் போரும் இல்லை அமைதியும் இல்லை என்ற நிலை நீடிக்கும்: சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை!!

சுருக்கம்

டெல்லியில் இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன ராணுவத்துறை அமைச்சர் லி ஷாங்பு இந்தியா வருகிறார்.  

டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கவிருப்பதை முன்னிட்டு இந்திய - சீன  எல்லையில் தொடர்ந்து அமைதி நிலவுவதற்காக இருதரப்பிலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. கிழக்கு லடாக்கில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை காரணமாக எல்லையில் அமைதி நிலவி வருகிறது. 

இந்த நிலையில் டெல்லியில் இந்த வாரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சீன ராணுவத்துறை அமைச்சர் லி ஷாங்பு வருகிறார். இதையொட்டி நேற்று 18வது சுற்று பேச்சுவார்த்தை கிழக்கு லடாக் பகுதியில் சுஷுல் மோல்டா எல்லையில் நடந்தது. நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் என்ன முடிவுகள் எட்டப்பட்டன என்பது குறித்த செய்தி இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்னதாக 17வது சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 20ஆம் தேதி நடந்து இருந்தது. 

கூட்டத்தில் என்ன பரிமாறப்பட்டது என்பது வெளியாகவில்லை என்றாலும், ''எல்லையில் தங்களது துருப்புக்களை வாபஸ் பெற வேண்டும் என்றும் வாபஸ் பெறாவிட்டால் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலை நீடிக்கும்'' என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. 

ராஜீவ் காந்தி ஆட்சியில் இந்தியாவில் ஊடுருவிய சீனா..அன்றே கணித்த கிருஷ்ணசாமி சுந்தர்ஜி - யார் இவர்?

நேற்றைய பேச்சுவார்த்தையின்போது, டெப்சாங் பல்கே, சார்டிங் நிங்லுங் நல்லா பகுதிகளில் சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் மாவட்ட ராணுவ தளபதி தலைமையில் முகாமிட்டு இருக்கும் சீன துருப்புகள் வாபஸ் பெற வேண்டும் என்று 14வது கார்ப், இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறியதாக வெளியாகி இருக்கும் தகவலில், ''வரும் ஏப்ரல் 27-28 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு சீன ராணுவ அமைச்சர் வருகிறார். அப்போது, சீன ராணுவத்தினர் ஏதாவது செயலில் ஈடுபடுகிறார்களா என்று கவனிக்க வேண்டும். இருதரப்பிலும் பதற்றத்தை தணிக்க வேண்டும். ராணுவ வீரர்களை மாற்றி அமைக்க வேண்டும். கனரக வாகனங்களை இருதரப்பிலும் நிறுத்த வேண்டும். ராக்கெட், டாங்க் ஆகியவற்றை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

எல்லையில் இருந்து சீனா தனது துருப்புகளை இதுவரை விலக்கிக் கொள்ளவில்லை. மேலும்,எல்லையில் ஆக்ரமித்த இடத்தை சீனாவிடம் இருந்து இந்தியா எடுத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியா - சீனாவுக்கு இடையே எல்லையில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு கோடு  பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கான ரோந்து இடம் இருக்கிறது. அதை தற்போது சீனா ஆக்கிரமித்து நகர மறுக்கிறது. 

படித்தது சென்னை ஐஐடியில்.. துபாயில் கைநிறைய சம்பளம்.. காதலிக்காக திருடனாக மாறிய நபர்..

இதேபோன்று டெப்சாங் பகுதியில் 16,000 அடி உயரத்தில் இருக்கும் போஸ்ட் எண் 10, 11, 12, 12A, 13 ஆகியவற்றை சீன ராணுவம் ஆக்கிரமித்து இருக்கிறது. இவை அனைத்தும் இந்திய பகுதிக்கு உட்பட்டது. சுமார் 18 கி. மீட்டர் தூரத்தை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டில் சீன ராணுவம் வைத்துக் கொண்டுள்ளது. 

இருநாடுகளுக்கும் இடையிலான சுமார் 3488  கி மீட்டர் தொலைவிற்கான எல்லையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து சீனா தனது துருப்புகளை அதிகரித்து, தனது பலத்தை அவ்வப்போது இந்தியாவுக்கு எதிராக திருப்பி வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் 9ஆம் தேதி, தவாங் செக்டரில் இருக்கும் யாங்சே பகுதியில், இருதரப்புக்கும் இடையே லேசான சல சலப்பு ஏற்பட்டது. இத்துடன், அருணாசலப்பிரதேசத்திற்கு சொந்தமான 11 இடங்களை உரிமை கோரியதுடன், அந்த இடங்களுக்கு சீன பெயர்களையும் பீஜிங் வைத்துள்ளது. இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன், அமெரிக்காவும் இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவின் ஒரு பகுதிதான் அருணாசலப்பிரதேசம் என்று தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு எல்லையில் எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ள ராணுவப் படை தயாராக இருக்க வேண்டும் என்று கடந்த வாரம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார். மேலும், இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!