லிங்காயத் சமுதாயத்தை அவதூறாக பேசிய சித்தராமையா..கையில் எடுத்த பாஜக! திணறும் காங்கிரஸ் - கர்நாடக தேர்தல்

By Raghupati R  |  First Published Apr 24, 2023, 11:03 AM IST

பாஜகவின் லிங்காயத் முதல்வர் ஊழலால் மாநிலத்தை நாசப்படுத்திவிட்டார் என்று முதல்வர் பசவராஜ் பொம்மையைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.  தற்போது அதே போல சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து மாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா. 

பாஜகவின் லிங்காயத் முதல்வர் ஊழலால் மாநிலத்தை நாசப்படுத்திவிட்டார் என்று முதல்வர் பசவராஜ் பொம்மையைக் குறிப்பிட்டு பேசியது தான் சர்ச்சைக்கு காரணம். சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இதுகுறித்து பேசிய போது, “காங்கிரஸ் தலைவர்கள் லிங்காயத் சமூகத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது” என்றார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க..கடைசி நேரத்தில் ரத்து.. பிடிஆருக்கு நோ சொன்ன முதல்வர் - உண்மையை போட்டு உடைத்த சவுக்கு சங்கர்.!

பாஜக தலைவரும் எம்.எல்.ஏவுமான அரவிந்த் பெல்லாடு, லிங்காயத் தலைவர்களை பாஜக அவமதித்ததாகக் குற்றம் சாட்டி, சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இதற்கு பதில் அளிப்பாரா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சமஷாலி சாமியார் ஜெயம்ருத்யுஞ்சய சுவாமிஜி, சித்தராமையாவின் இத்தகைய கருத்துக்கள் குறித்து வேதனை தெரிவித்ததுடன், இது சமூகத்தை புண்படுத்தியதாக கூறினார். இதற்கிடையில், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு, சித்தராமையா சமூகத்தையே அவமதிப்பதாகக் குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது.

சித்தராமையா தரப்பில், தனது அரசியல் ஆதாயங்களுக்காக எனது கருத்துக்கள் பாஜகவால் திரிக்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மூத்த பாஜக தலைவரும், லிங்காயத் வலிமைமிக்கவருமான பி.எஸ். எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறைக்குச் சென்றதையடுத்து, பாஜகவின் லிங்காயத் தலைவர்கள் உண்மையைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக தேவையில்லாமல் காங்கிரஸை குறிவைப்பதாக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க..குடும்பத்தினர்களுக்கு மட்டும் டெண்டர்! இலவச லேப்டாப் குளறுபடி.! அதிமுக ஆட்சி பற்றி சிஏஜி அதிர்ச்சி தகவல்.!

இதையும் படிங்க..ஒரு நைட்டுக்கு 80 ஆயிரம்.. மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்த பிரபல நடிகை கைது.!!

click me!