பயங்கரவாதி சஜித் மிருக்கு கொடை பிடிக்கும் சீனா: வெளுத்து வாங்கிய இந்தியா!!

By Dhanalakshmi G  |  First Published Jun 21, 2023, 3:05 PM IST

பயங்கரவாதிகளில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இல்லை. இரட்டை நிலையை தவிர்க்க வேண்டும் என்று சீனாவுக்கு பயங்கரவாதி சஜித் மிர் குறித்த விஷயத்தில் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது


மும்பையில் 26/11 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் தேடப்படும் பயங்கரவாதியான சஜித் மிர் இன்றும் தலைமறைவாக இருக்கிறார். அவரை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐநாவில் அமெரிக்காவும் முன்மொழிந்து இருந்தது. இதை இந்தியாவும் வழிமொழிந்தது. ஆனால், இதற்கு சீனா வழக்கம்போல் முட்டுக்கட்டை போட்டது. 

ஐக்கிய நாடுகள் சபையின் இணைச் செயலாளர் பிரகாஷ் குப்தா கூறியுள்ள செய்தியில், ''மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நீதி இன்னும் மறுக்கப்படுகிறது. தாஜ் ஓட்டலுக்குள்  இருந்தவர்களை சுட்டு வீழ்த்துமாறு உடன் இருந்த பயங்கரவாதிகளுக்கு சஜித் மிர் வழிகாட்டி உத்தரவை பிறப்பித்த ஆடியோ ஆதாரமாக இருக்கிறது.

Tap to resize

Latest Videos

உலகின் மிக விலையுயர்ந்த நகரம்: முன்னேறும் சிங்கப்பூர் - என்ன காரணம்?

இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் தேசிய சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதியாக மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சஜித் மிர் பட்டியலிடப்பட்டார். ஆனால், சஜித் மிர்-ஐ பட்டியலிடுவதற்கான முன்மொழிவை பல நாடுகள் கொடுத்து இருந்தன. ஆனாலும், பல உறுப்பு நாடுகள் இணை ஆணை வழங்கிய போதிலும், ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் பட்டியல் இடப்படவில்லை. உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பில் ஏதோ தவறு நடந்து வருவதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்'' என்று குப்தா தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்கொய்தா தடையின் கீழ் சஜித்தை ஒரு உலகளாவிய பயங்கரவாதியாக தடுப்புப்பட்டியலில் சேர்க்க அமெரிக்கா முன்மொழிந்தது. இதை இந்தியாவும் ஆமோதித்தது. ஆனால், இதை சீனா தடை செய்தது. இது அவரை சொத்துக்கள் முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதத் தடைக்கு உட்படுத்தும். 

ஐ.நா. சபையில் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதைத் தடுத்த சீனா!

இதையடுத்து, ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் இருக்கும் சில முக்கிய இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும், இரட்டை வேடத்தை தவிர்க்க வேண்டும், பயங்கரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்பது கிடையாது என்று குப்தா தெரிவித்துள்ளார்.

click me!