பிரதமர் நரேந்திர மோடி தற்போது அரசமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை கொலை செய்யப் போவதாக நபர் ஒருவர் மிரட்டி உள்ளார். கொலை மிரட்டல் விடுத்த நபரிடமிருந்து இரண்டு அழைப்புகள் வந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இரண்டு அழைப்புகளும் காலை 10-11 மணியளவில் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பஸ்சிம் விஹார் (கிழக்கு) என்ற ஒரு எண்ணில் இருந்து அழைப்புகள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்த நபர் குடி போதைக்கு அடிமையானவர் என்றும், காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் 10 வயது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவரை தேடி வருவதாக கூறப்படுகிறது.
டைம்ஸ் நவ்வின் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து ராகுல் ஷிவ்சங்கர் விலகல்
காவல்துறை துணை ஆணையர் ஹரேந்திர சிங் இதுகுறித்து பேசிய போது , “ விவிஐபிகளை குறிவைத்து அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து எங்களுக்கு இரண்டு பிசிஆர் அழைப்புகள் வந்தன. ஒன்று காலை 10.46 மணிக்கும் மற்றொன்று 10.54 மணிக்கும் வந்தது. அவர் தனது முதல் அழைப்பில், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கொலை செய்வதாக மிரட்டி ரூ.10 கோடி கேட்டார். பின்னர் அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கொலை செய்யப் போவதாக மிரட்டி ரூ. 2 கோடி கோரினார். உடனடியாக காவல் நிலைய அதிகாரி, நான்கு பேர் கொண்ட குழுவுடன் உடனடியாக பஸ்சிம் விஹாரில் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அழைப்பு விடுத்த நபர் வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது.
சந்தேக நபர் சுதீர், மதுவுக்கு அடிமையானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தச்சு வேலை செய்து வருகிறார். காலையில் இருந்து சுதீர் மது அருந்தியதாக அவரது மகன் எங்களிடம் கூறினார். தன் தந்தையின் இருப்பிடம் தெரியாது என்று அவர் மகன் கூறினார். அவரைக் கண்டுபிடிக்க எங்கள் குழு தொடர்ந்து முயற்சித்து வருகிறது, ”என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்!